ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு
ஆளான தேவேந் திரன் தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக்
கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில்
இருத்திக் கொண்டு நீல கண்டனானார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனித
மான பொருட்கள் வந்தன. பாற்கடலிலிருந்து கடைசி யில் திருமாலே தன்வந்திரி யாக அம்ருத
கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந் தான அமிர்தத்தையும் தான் இழந்த
பிற பொருட் களையும் பெற்று தேவலோகம் சென்றான்
திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய
நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு
தற்போது பிரபலமாகி வருகிறது. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள
சுலோகத் தைக் கூறி வழிபடலாம். இதை 16 முறைக்குக் குறையாமல்
கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்,
ஓம்
நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச
ஹஸ்தாய சர்வ பய விநாசாய
சர்வ
ரோக நிவாரணாயத்ரைலோக்ய பதயே
த்ரைலோக்ய
நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ
தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்த.
உலக நலன்
கருதி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை
தன்வந்திரி பீடத்தில்காலை 10.00 மணிக்கு கோ பூஜையுடன்
மூலவர் தன்வந்திரிக்கு பால் தயிர்,மஞ்சள்,
சந்தனம், பன்னீர், இளநீர்,
பஞ்சாமிருதம்,நெல்லிக்காய் பொடி, கரும்புசாறு, இவற்றுடன் 108 மூலிகை திரவியங்களை கொண்டு
பிரத்தியோகமாக தயாரித்த மூலிகைப்பொடிகளினால் மஹா திருமஞ்சனமும், தன்வந்திரி ஹோமமும் நடைபெற்றது
தன்வந்திரி
ஆயுர்வேத மருத்துவ மையத்தின் சார்பாக இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை திருமதி.நிர்மலா முரளிதரன் குத்துவிளக்கு
ஏற்றி வைத்து தன்வந்திரி மந்திரம் ஜபம் செய்தனர்.வேலூர் மாவட்ட
ஆட்சித் தலைவர் உயர்திரு S.A. ராமன் அவர்கள் துவக்கி வைத்து ஆயுர்வேத
மருத்துவத்தின் மகிமையை சிறப்புரையாற்றினார்.
இம் மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினராக மகாலட்சுமி காலேஜ் நிர்வாகி டாக்டர் திரு.பாலாஜி
அவர்களும் மற்றும் R.I.T. கல்லூரி சேர்மன்
திரு. போஸ் அவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களிலிருந்து வருகை
புரிந்த ஆயுர்வேத மருத்துவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை எடுத்துறைத்தனர்
,.இம் மருத்துவ முகாம் தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மையத்தின்
R.M.O. டாக்டர்.திருமதி. மீரா சுனில்குமார் தலைமையில் நடைபெற்றது
,. .இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று
இலவச மருத்துவ ஆலோசனை பெற்று இலவசமாக மருந்து மாத்திரைகளை பெற்று பயன் பெற்றனர்.
இந்த முகாம்
நாளையும் நாளை மறுநாளும் காலை
10.00 மணிமுதல் நண்பகல் 2.00 மணிவரை நடைபெறுகிறது. என்று தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment