வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 24.10.2016 திங்கட்கிழமை காலை
10.00 மணியளவில் ஆயில்ய
நட்சத்திரத்தை முன்னிட்டு பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி காலசர்ப தோஷ சாந்தி பரிஹார
ஹோமம் நடைபெற்றது.
இராகு
கேது தோஷம் அகலவும்,
நாக தோஷம் சர்ப தோஷம் விலகவும், ராகுபுக்தி ராகுதிசையினால்
ஏற்படும் தடைகள் அகலவும், திருமணம் குழந்தைபேறு அமையவும் மேலும்
ஒருவருடைய வாழ்க்கையில் இருந்து வரும் குடும்ப பிரச்சனைகள், நாள்
பட்ட வியாதிகள், வியாபாரத்தில் வரும் இடையூறுகள், சகோதர, சகோதரிகளுக்குள் உள்ள மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை
பெற, ஒருவருடைய வேலை அல்லது செய்யும் தொழில் மந்தமில்லாமல் சீராக
நடைபெற, வீடு அல்லது வாகனங்கள் மூலமாக வரும் தொல்லைகளிலிருந்து
விடுபட, தந்தையுடன் இருந்து வரும் மனக் கசப்பு நீங்கி சுமுக உறவு
நிலவ, குடும்ப கஷ்டங்கள் இன்றி வளம் பெற மற்றும் எந்த காரியமும்
தடைகள் இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெறவும் பக்தர்கள் பங்கு கொண்டு, பிரார்த்தனை
செய்து ராகு கேதுவின் அருளையும், ஸ்வாமிகளின் ஆசிகளையும்
பெற்றுச் சென்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்துனர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment