தன்வந்திரி பீடத்தில்சனி பிரதோஷம் சிறப்பு பூஜைகள்.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் சனி மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு
வருகிற 02.02.2019
சனிக்கிழமை
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பீடத்தில்
பிரதிஷ்டை செய்துள்ள ‘சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும்,
ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற உள்ளது.
சனி
மஹாப்பிரதோஷ பூஜை பலன்கள் :
பிரதோஷ
காலத்தில் சிவபெருமானை ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும்.
ஒவ்வொரு
மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள
காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்தத் திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால்
மஹா சனிப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. பிரதோஷ நாட்களில் அதிகாலை எழுந்து
நீராடி, சிவாலயம் சென்று வழிபட்டு, அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து
திருமுறைகளைப் படித்து, பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு
சிவாலயம் சென்று உள்ளம் உருகி ‘ஓம் நம சிவாய’ என்ற நாமத்தை சொல்லி சிவபெருமானை வழிபடுவதின்
மூலம் வாழ்கையில் ஏராளமான நன்மைகளை அடையலாம்.
எல்லா
பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் 'சனிப்
பிரதோஷம்" என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில்
(தேய்பிறை) சனிக்கிழமையில் வந்தால் 'மஹாப்
பிரதோஷம்" என்று வழங்கப்படுகிறது.
சாதாரண பிரதோஷ
வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த
பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும்போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு
செய்த பலனும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
பிரதோஷ
காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை
வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க
வேண்டும்.
நமசிவாய என்ற
ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக
தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து
கண்ணீர் மல்க வழிபாட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்.
பிரதோஷ
நாட்களில் தன்வந்திரி பீடத்தில் ‘சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும்,
ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற உள்ளது.
சிவபெருமானுக்கும்
அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் ஒரே நேரத்தில் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்று பின் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை பின் தீபாராதனை நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு போன்ற அபிஷேக பொருட்களும் பழங்கள்,
புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று
இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இன்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment