Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, February 17, 2019

Pradosha Pooja


வாலாஜா தன்வந்திரி பீடத்தில்

பிரதோஷ பூஜை நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 17.02.2019 தேதி மாசிப் பிரதோஷம், மாலை நடைபெற்றது. ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஆதாரபீடத்தில் நந்தியுடன் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடவும், பாவங்களை நீக்கி, புண்ணியங்களைத் தந்தருளவும். ஈஸ்வரரின் பரிபூரண அருளை பெறவும், ஞான யோகத்துடனும் வாழவும் வில்வம், செவ்வரளி, அருகம்புல் மற்றும் பல பூஜை பொருட்கள், நிவேதன பொருட்கள், ஹோம பொருட்கள், அபிஷேக பொருட்கள் கொண்டு பிரதோஷ பூஜை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதோஷ நேரமும் ராகுகால நேரம் என்பதால் பக்தர்கள் சிவனுக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, சிவ தரிசனம் செய்து, தன்வந்திரி பீடத்தில் உள்ள 9 அடி மஹிஷாசுர மர்த்தினிக்கு நெய்விளக்கு ஏற்றி, 27 நக்ஷத்திரங்கள் 9 நவக்கிரகங்களுக்குரிய விருட்சங்களை கொண்டு அமைந்துள்ள காலச்சக்கிரத்தையும், ஏகரூப சரீரமாக உள்ள ராகு – கேதுவை வணங்கி வழிபட்டு ராகு கேது தோஷங்களைப் போக்கி பயம் நீங்கியும், சகல பாப தோஷம் நீங்கியும்  கல்வி, உத்தியோகம், தொழில் மற்றும் சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றங்களை பெறவும் பிரார்த்தித்தனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் குடும்பத்தில் சுபிட்சம், குடும்ப ஒற்றுமை, குழந்தைகள் ஆரோக்யத்துடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், ராகு-கேது தோஷம் நீங்கவும் நடைபெற்ற யாகத்திலும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெற்ற பூஜையிலும் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment