Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, February 18, 2019

Panthakkal Muhurtham ...


வாலாஜா தன்வந்திரி பீடத்தில்1000 தவில் - நாதஸ்வர இசையுடன் நடைபெறும்16 தெய்வீக திருகல்யாண மஹோத்ஸவத்திற்கானபந்தக்கால் நடும் விழா பிப்ரவரி 22-இல் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். இப்பீடத்தில் மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், விவசாயம், வியாபார பெருமக்கள் நலனுக்காகவும், குடும்பங்களில் திருமணம், மக்கட்பேறு, கிரக பிரவேசம் போன்ற வைபவங்கள் தடையில்லாமல் நடைபெற வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும் எங்கும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் கிடைக்க வேண்டியும், குலதெய்வம், குடும்ப தெய்வம் அருளுடன் ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற வேண்டி தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு உலகில் எங்கும் நடைபெறாத வகையில் வரும் பங்குனி மாதம் 03 ஆம் தேதி (17.03.2019) 16 தெய்வீக திருகல்யாணத்துடன் 1000 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம நிகழ்ச்சியுடன் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு வருகிற மாசி மாதம் 10 ஆம் தேதி 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 10.00 மணிக்குள்ளாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பந்தக்கால் முஹூர்த்த விழா நடைபெற உள்ளது.

ஆரோக்ய ஸ்தலமான ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் பலவிதமான வைபவங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு உலக நலன் கருதி 16 தெய்வீக திருகல்யாணம் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

மேற்கண்ட வைபவம் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 17-ஆம் தேதி வரை, அதாவதி மாசி மாதம் 29 ஆம் தேதி முதல் பங்குனி மாதம் 03 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு பூர்வாங்கப் பணிகளைத் தொடங்குவதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பந்தக்கால் நடும் விழா யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 10.00 மணிக்குள்ளாக பந்தக்கால் முஹூர்த்ததிற்கான சிறப்புப் பூஜைகள், யாகங்களுடன், மகா தீபாராதனை நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மஹாதன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் தன்வந்திரி குடும்பத்தினர்கள், கலவை தவத்திரு. சச்சிதானந்த ஸ்வாமிகள், சென்னை நங்கநல்லூர் 108 சக்திபீட ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ காமாக்ஷி ஸ்வாமிகள், குடியாத்தம் கும்மாத்தம்மா, கொடுமுடி ஆட்சி பீடம் ராணி அம்மா, காஞ்சீபுரம் லலிதாம்பிகை பீடம் ஸ்வாமிகள், பூந்தமல்லி அன்னபாபா ஆலய நிறுவினர் திருமதி. ஸ்ரீமதி, சென்னை ராமாவரம் செந்தமிழ் நகர் வைத்தியநாத பாபா ஆலய நிர்வாகி திரு. தயாளன் மற்றும் நகரகிராம நிர்வாகிகள், தொழிலதிபர்கள், மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த தகவலை விழா குழுவினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment