வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஏற்றம் தரும் ஏழு ஹோமங்கள்
மார்ச் மாதம் 13 முதல் 15 வரை
கோமாதா திருக்கல்யாணம் - 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம்
துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம் - 108 கன்யா பூஜை
வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம் - 108 தம்பதி பூஜை
தினமும்
காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 13.03.2019 புதன்கிழமை முதல் 15.03.2019 வெள்ளிக்கிழமை
வரை தினமும் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை கோமாதா
திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம்,
துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம், 108 கன்யா பூஜை, வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம், 108 தம்பதி பூஜை நடைபெறுகிறது.
கோமாதா திருக்கல்யாணம் - 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம்
முப்பத்தி முக்கோடி தேவர்களின் ஆசி வேண்டியும், சகல விதமான தோஷங்கள் நீங்கவும், சகல விதமான ஜீவராசிகளின் நலன் வேண்டி கோமாதா திருக்கல்யாணமும், கணவனுடைய ஆயுள் தீர்க்கம் வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், சௌபாக்யங்கள் கிடைக்க வேண்டியும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்க வேண்டியும் 108 பெண்கள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும், வேத மாதாவின் அருள் வேண்டியும், வேதங்களை போற்றி ஆராதிக்கும் விதத்திலும், அந்தணர்களின் வாழ்வு சிறக்கவும் சமஷ்டி உபநயனமும் 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.
துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம் – 108 கன்யா பூஜை
ஒவ்வொருவருக்கும் மஹாவிஷ்ணு - மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெற துளசி தேவி – நெல்லிராஜா ( துளசி செடி – நெல்லி செடி) திருக்கல்யாணமும், பெண் சாபங்கள் நீங்கவும், குலதெய்வ தோஷங்கள் அகலவும், பாலாவின் பரிபூரண அருள் கிடைத்து குடும்பங்களில் சுபிட்சங்கள், சுப காரியங்கள் ஏற்படவும், 108 கன்னிபெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜையும் 14.03.2019 மாசி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம் – 108 தம்பதி பூஜை
இயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின் அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும் நிம்மலக்ஷ்மி – அஸ்வத் ராஜா (வேப்ப மரம் – அரச மரம்) திருக்கல்யாணமும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், சௌபக்யங்கள் கிடைக்கவும், குடும்பங்கள் சிறந்து விளங்கவும், பல்வேறு விதமான சாபங்கள் விலகவும், ஆண் – பெண்கள் ஒருவரை ஒருவர் புரிந்த்கொண்டு மகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜையும் 15.03.2019 பங்குனி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 2.00 வரை நடைபெறுகிறது.
மேற்கண்ட அனைத்து பூஜைகளும், ஹோமங்களும் மார்ச் 16, 17 ல் ஒரே மேடையில்
ஒரே நேரத்தில் நடைபெறும் திருக்கல்யானத்திற்கான பூர்வாங்க பூஜைகளாகும். இந்த தகவலை
தனவந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment