Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, February 2, 2019

Mahodaya Amavasai - Nikumbala Yagam


தன்வந்திரி பீடத்தில்60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்மகோதய அமாவாசையில் –சகல சௌபாக்கியங்களும் கிட்டும் அமாவாசை யாகம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி, “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள், ஆக்ஞைப்படி தை அமாவாசை எனும் மஹோதய அமாவாசையை முன்னிட்டு வருகிற 04.02.2019 திங்கள்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நிகும்பலா யாகம் நடைபெறுகிறது.

நம் தேசத்தில் ஓடும் எல்லா நதிகளும் சுற்றியுள்ள சமுத்திரங்களும் புண்ணிய நீர் நிலைகள்தான். ஒவ்வொரு காலங்களில் ஒவ்வொரு நதிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக புண்ணிய காலங்கள் கொண்டாடப்படுகின்றன. அப்படிபட்ட குறிப்பிட்ட தினங்களில் அந்த புண்ணிய நதிகளில் நீராடி, பித்ரு பூஜைகள் செய்வது பல மடங்கு பலனைத் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய புண்ணிய காலங்களில் ஒன்றுதான் "மஹோதய புண்ணிய காலம்' என்பது. இது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியது.

இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் "மஹோதய புண்ணியகாலம்' பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தை மாதம், அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, கூடிய நாளில் அஸ்வினி, திருவாதிரை, திருவோணம், அவிட்டம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அது "வ்யதி பாதம்' அல்லது "வ்யதி பாத யோகம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாள் நூறு சூரிய, சந்திர கிரகணங்களுக்கு இணையான புண்ணிய நாளாகும். அதைப் போலவே தை மாதம் அமாவாசை, திருவோணம் நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை மஹோதய புண்ணியகாலமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய புண்ணிய தினங்களில், புண்ணிய நதிகளிலும், தீர்த்தங்களிலும், சமுத்திரங்களிலும், நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதால், அவர்களின் ஆசீர்வாதத்துடன் நிறைவான வாழ்வு கிட்டும்.

இத்தகைய அரிய நிகழ்வான மஹோதய புண்ணிய காலம், 04.02.2019 திங்கட்கிழமை அன்று வருகிறது. வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமாவாசை யாகம் நடைபெற உள்ளது.

அமாவாசையில் நிகும்பலா யாகம் என்பது பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த யாகத்தில் மிளகாய் ஆகுதியாக கொடுக்கப்படுகிறது. யாகத்தீயில் இடப்படும் மிளாகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது தனி சிறப்பு.

இந்த யாகத்தில் கலந்து கொண்டால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உண்டாகும், திருமணம், வியாபாரம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

பில்லி, சூனியம் செய்வினை தீர்க்கும் நிகும்பலா யாகம்- நன்மை தரும் யாகங்கள் :

ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலக நலன் கருதி ஒவ்வொரு அமாவாசையிலும் சூலினி ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் 'நிகும்பலா யாகம்' என்று சொல்லப்படும் மிளகாய் வற்றல் யாகம் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.

அமாவாசை யாகம் :

பில்லி, சூன்யம், நோய், தரித்திரம் போன்றவை அகலவும் இழந்த பதவி கிடைக்கவும். ஐஸ்வர்யம் பெருகவும். ராகு, கேது தோஷம் நீங்கவும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 04.02.2019 திங்கள்கிழமை தை அமாவாசை தினத்தன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை அமாவாசையை முன்னிட்டு நடக்க இருக்கிற மிளகாய் வற்றல் யாகம் வெகு விசேஷமானது. இதை மஹா உக்ர ப்ரத்யங்கிராதேவி ஹோமம் என்று சொல்லலாம். அதாவது ஸ்ரீப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மஹா உக்ர ப்ரத்யங்கிராதேவி ஹோமம் நடைபெற உள்ளது.

மிளகாய் வற்றல் யாகம் :

பக்தர்களின் நலன் கருதியும், உலக நலன் கருதியும் ஒவ்வொரு அமாவாசையில் சூலினி ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் நிகும்பலா யாகம்' என்று சொல்லப்படும் மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. அமாவாசை யாகத்தில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், மிளகு, உப்பு, 108 வகையான மூலிகைகள், காய்கறி வகைகள், பழ வகைகள், இனிப்பு மற்றும் கார வகைகள், பூசணிக்காய்கள், பட்டுப் புடவை, பல வகையான புஷ்பங்கள், 27 நட்சத்திர தேவதைகளுக்கு உண்டான தாவரங்கள், நெய், தேன் என, இன்னும் திரவியங்கள் இந்த ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ப்ரத்யங்கிரா ஹோமத்தில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் 64 வகையான சாபங்கள் நிவர்த்தி ஆவதாக ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் இந்த யாகம் நடைபெறுகிறது.

இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மிளகாய் வற்றல், புசணிக்காய், குங்குமம், மஞ்சள், எளுமிச்சம் பழம், உப்பு, மிளகு, மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203





No comments:

Post a Comment