Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, February 1, 2019

Mahishasura Mardhini Manjal Abhishekam .....


தன்வந்திரி பீடத்தில்

ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு

மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் மலராபிஷேகம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி, “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று 01.02.2019 காலை 10.00 மணியளவில், மரணபயம் போக்கி மங்கள வாழ்வு தரும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் மலராபிஷேகம் நடைபெற்றது.

தை மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளை போற்றி வழிபடும் சிறப்பு நாளாக கருதப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியில் வரும் ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள லயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இன்று தை மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள மஹிஷாசுர மர்த்தினிக்கு மஞ்சள், குங்குமம், பால், சந்தனம், பன்னீர், போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து பலவகை புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி செய்து அம்பாளுக்கு உகந்த செவ்வரளி மாலை, எலுமிச்சம் பழம் மாலை சார்த்தி, நெய் தீபமேற்றும் வழிபாடும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment