Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, February 23, 2019

Nadha Sangamam - Advisory Meeting


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 

நாதஸ்வர கலைஞர்களின் 

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை முதல் 17.03.2019 பங்குனி மாதம் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம், என ஷண்மத கடவுள்களை பிரதிஷ்டை செய்து ஷண்மத பீடமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஷண்மத தெய்வங்களை போற்றி ஆராதிக்கும் விதத்தில் ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவமும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு சஹஸ்ர கலசாபிஷேகமும், ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்துடன் 1000க்கு மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பஙேற்கும் நாதசங்கமம் நிகழ்ச்சியுடன் பல்வேறு வைபவங்கள் ஸ்வாமிகளின் அருளானைப்படி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (23.02.2019) காலை 11.00 மணியளவில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தவில், நாதஸ்வர கலைஞர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருகிற மார்ச் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை தன்வந்திரி பீடத்தின் 15 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மஹா தன்வந்திரி ஹோமமும் ஆயிரம் கலசங்கள் கொண்டு தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில் ஆந்திரா, கர்னாடக, புதுச்சேரி, மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சுற்று புறம் உள்ள 30 க்கும் மேற்பட்ட  கிராமங்களில் இருந்தும் சுமார் 1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர் என்று இதில் பங்கு பெற்ற தவில், நாதஸ்வர கலஞர்களின் பிரதிநிதிகளானா சோளிங்கர் R.V. சித்திரகுமார், சோளிங்கர் K.M. நாராயண மூர்த்தி, சோளிங்கர் R.P. செல்வராஜ், அனந்தலை S. ரமேஷ், வாலாஜா R. வேல்முருகன், வாலாஜா V. ஜெகன்நாதன், வாலாஜா V. கார்த்திகேயன், காவேரிபாக்கம் S. பிரகாஷ், ஓச்சேரி M. மோகன், அல்லிகுளம் E. பாபு, அல்லிகுளம் B. ராமகிருஷ்ணன் தெரிவித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment