தன்வந்திரி பீடத்தில்மாணவ-மாணவிகளின் கல்வி தரம் உயரவும், தேர்வு பயம் நீங்கி
ஆரோக்யத்துடன் தேர்வு எழுதவும்
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் யாகம்.
வருகிற 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை நன்மை தரும் நான்கு ஹோமங்களாகநடைபெறுகிறது.
'நோயற்று
வாழட்டும் உலகு' என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தன் தாய்க்கு
கொடுத்த சத்தியத்தின்படி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீமுரளிதர
ஸ்வாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்டது, வேலூர் வாலாஜாபேட்டை
அருகே உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். ஸ்ரீதன்வந்திரி பகவான்தான் இங்கே பிரதான
தெய்வம்.
எத்தனை செல்வம் இருந்தாலும், வசதி இருந்தாலும், அவற்றை ஒருவர்
அனுபவிப்பதற்கு தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் அல்லவா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதன்படி நாம் நம் உடலை நோய் நொடிகளில் இருந்து காக்க வேண்டும். ஆனால், இந்த பிரபஞ்சத்தின் ஆதி மருத்துவரான ஸ்ரீதன்வந்திரியை ஆராதித்து
ஆசிகளைப் பெறுவது அவசியம்.
ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு வாலாஜாபேட்டை
கீழ்புதுப்பேட்டையில் அனந்தலை மதுராவில் தனி சந்நிதியோடு சக்தி வாய்ந்த பீடம்
அமைந்து இன்றைய தினத்தில் 75 சந்நிதிகளும், 468 சித்தர் சந்நிதிகளும் கொண்டு பிரமாண்ட
வாழ்வியல் மையமாக மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு வருகிறது.
இதுவரை பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீதன்வந்திரி ஹோமங்களும் பிற ஹோமங்களும் இங்கே நடந்துள்ளன. அது மட்டுமா? இது தவிர எத்தனை
எத்தனை யாகங்கள்!
உலகில் வேறு எங்கும் நடந்திராத ஆன்மிக
அன்பர்கள் பலரும் கேள்விப்பட்டிராத விதம் விதமான பிரமாண்ட ஹோமங்களை அடிக்கடி
நடத்தி, இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் நலனுக்காக ஸ்ரீதன்வந்திரி
பகவானை ஆராதித்து வருகிறார் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர். ஸ்ரீமுரளிதர
ஸ்வாமிகள்.
கோடி ஜப தன்வந்திரி
ஹோமம், கோடி ஜப குபேர யாகம், கோடி ஜப காலபைரவர் யாகம், ஒரு லட்சம்
நெல்லிக்கனி ஹோமம், 1,32,000 மோதக ஹோமம், 1,10,000 லட்டு ஹோமம்,
10 லட்சம் ஏலக்காய்களைக் கொண்டு விசேஷ ஹோமம், தாமரை பூக்களால் லக்ஷ ஜப ஹோமம், 15 ஆயிரம்
வாழைப்பழ ஹோமம், 10 ஆயிரம்
மாதுளம்பழ ஹோமம், ஒரு லட்சம்
நெல்லிக்கனி ஹோமம், 2014 பூசணிக்காய்
ஹோமம், 6 ஆயிரம் கிலோ மிளகாய் ஹோமம், 11 ஆயிரம் வில்வப் பழம் ஹோமம், 10 லட்சம் ஏலக்காய்களைக் கொண்டு ஹயக்ரீவர் ஹோமம்
போன்ற பல்வேறு யாகங்கள் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இயற்கை
அறிவியல்படி பூமியில் விளையக் கூடிய ஒவ்வொரு தாவரத்துக்கும் ஒவ்வொரு
முக்கியத்துவம் உண்டு. அதன்படி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான மூலிகைப்
பொருட்களைக் கொண்டு இந்த பீடத்தில் நடக்கின்ற ஒவ்வொரு ஹோமமுமே விசேஷமானது.
உதாரணத்துக்கு மேலே சொல்லப்பட்ட
சிறப்பு ஹோமங்களில் 15 ஆயிரம்
வாழைப்பழ ஹோமம் ஸ்ரீ ஆஞ்சநேயரையும், விநாயகப்
பெருமானையும் முன்னிறுத்தி நடத்தப்பட்டது.
இதையே எடுத்துக் கொண்டால், வாழைப்பழம் என்பது மலச் சிக்கல், குடற்புண்
போன்ற உடல் ரீதியிலான நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. பொதுவாக, எந்த ஒரு தெய்வத்துக்கு ஆராதனை என்றாலும், எந்த ஒரு ஹோமம் என்றாலும் வாழைப்பழம் அங்கே நிச்சயம் இடம் பிடித்து
விடும். அதுவும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேய பெருமானுக்கு வாழைப்பழம் ரொம்பவும்
இஷ்டம். எனவே 15 ஆயிரம்
வாழைப்பழங்களைக் கொண்டு இந்த ஹோமம் நடந்தது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள்
தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறப் பெற்று, ஸ்ரீதன்வந்திரி
பகவானின் அருளையும், ஸ்வாமிகளின்
ஆசியையும் ஒருங்கே பெற்றார்கள்.
இந்த வரிசையில் வருகிற 03.03.2019
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும் நன்மை
தரும் நான்கு ஹோமங்கள் மாணவ, மாணவியர்களின்
கல்வித்தரம் உயர அதி முக்கியத்துவம் பெறுகிறது.
ஏலக்காய் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி
ஹயக்ரீவர் கல்வி ஹோமங்கள் மாபெரும் அளவில் நடக்க உள்ளது. இதில் ஸ்ரீசரஸ்வதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர்
தன்வந்திரி ஹோமங்கள் ஆகியவையும் நடைபெற உள்ளன.
மாணவ மாணவியர்கள் கல்வியில்
மேம்படவும் ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், பள்ளி கல்லூரிகளின் கல்வித்தரம் உயரவும் இந்த ஹோமம் நடைபெற உள்ளது.
கல்விதான் அனைத்துக்கும் பிரதானம்.
இன்றைக்குக் குடும்ப ஒற்றுமை, வேலையின்மை, தாம்பத்தியத்தில் பிரிவு, குழந்தைப்
பேறின்மை, தேவையில்லாத வழக்குகள், விவகாரங்கள்
போன்றவற்றுக்குப் போதிய கல்வியறிவு இல்லாததுதான் காரணம். மனிதனைப்
பக்குவப்படுத்துவது கல்வி. அது இல்லை என்றால், அனைத்திலும்
தோல்விதான் கிடைக்கும். எனவே, இந்த உலகில்
உள்ள அனைவரும் போதிய கல்வியறிவு பெற வேண்டும், கல்வித் திறன்
மேம்பட வேண்டும், பெற்ற
கல்வியால் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஹோமங்கள்
நடைபெற உள்ளன. ஸ்ரீவித்யா, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவர் போன்ற தெய்வங்கள் கல்வியோடு தொடர்புடையவை. ஆகவே, இந்த தெய்வங்களை முன்னிறுத்திச் செய்யப்படும் இந்த ஹோமங்களில் ஜாதி
மதம், ஏழை பணக்காரர், கற்றவர்
கல்லாதவர் என்கிற பேதம் இன்றி பெற்றோர் மற்றும் குரு ஆசியுடன் அனைவரும் கலந்து
கொண்டு பலன் பெற வேண்டும்.
இன்றைய மாணவர்கள் துர் சகவாசத்தாலும், போதிய வழிகாட்டுதல் இல்லாததாலும், தவறான பாதையின்
பக்கம் திரும்புகிறார்கள். மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துப் பள்ளிக்கூடங்களின்
தரமும் உயர வேண்டும்... மாணவர்கள் - ஆசிரியர் ஒற்றுமை ஓங்க வேண்டும்... மாணவர்கள் பெற்றோர்
இடையே இருக்கின்ற உறவு முறை ஓங்க வேண்டும் என்பதால் தேர்வுகள் துவங்க உள்ள இந்த
நேரத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெரும் முயற்சியில்
இத்தகைய ஹோமம் நடத்தப்படுவது மிகவும் பொருத்தமானது.
''இதையே ஒரு
அழைப்பிதழாகக் கொண்டு அனைத்துப் பள்ளி, கல்லூரி
நிர்வாகிகளும், ஆசிரியர்களும், சக ஊழியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும்
இந்த பிரமாண்டமான ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும்'' என்று அழைப்பு
விடுக்கிறார் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.
ஏலக்காய் தவிர ஹோமத்தில் தேன், நெய், தாமரை மற்றும்
பல விதமான புஷ்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தங்களின் குடும்பத்தில் உள்ள
வாரிசுகள் கல்வியில் நன்றாக மேம்பட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு இதில்
கலந்து கொள்ள பக்தர்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலும் கல்வித் தடையினால்
ஏற்படக்கூடிய நோய்களும், தேவையற்ற
பழக்கவழக்கத்தினால் ஏற்படும் நோய்களும், மன
அழுத்தங்களால் ஏற்படும் நோய்களும் நீங்குவதற்காகவும் புத்தாண்டில் மக்கள் நோயின்றி
ஆரோக்யமாக வாழ பத்து லட்சம் ஏலக்காயை கொண்டு தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது.
அருள் உள்ளமும், பொருள் வசதியும் கொண்ட பக்தர்கள் தங்களால் இயன்ற ஏலக்காய்களையும், ஹோம திரவியங்களையும் வாங்கிக் கொடுத்தால் இந்த அருட்பணி மேலும்
சிறக்கும்.
ஒற்றை ஏலக்காயே தன் அபார மணத்தால்
ஊரைக் கூட்டி விடும். வாசனைப் பொருட்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் ஏலக்காய்
இந்த ஹோமத்தில் சேர்க்கப்படும்போது இந்த சூழலே தெய்வீக மணம் நிறைந்து காணப்படும்.
தெய்வத் திருவுருவங்களுக்கு பூமாலை, சந்தன மாலை அணிவிப்பது போல் ஏலக்காய் மாலையும் விசேஷம். புரதச் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை ஏலக்காயில் அடங்கி உள்ளன. வாதம், பித்தம், கபம்
போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியான இந்த ஏலக்காயைக் கொண்டு நடத்தப்படும்
ஹோமத்துக்கு அனைவரும் வாருங்கள்!
வாருங்கள்... நோயின்றி வலிமையான
கல்வியில் சிறந்த உலகத்தை உருவாக்க அனைவரும் கலந்து கொள்ளுங்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment