தன்வந்திரி பீடத்தில்
வருகிற 23.02.2019 சனிக்கிழமையன்று
நாத சங்கம நிகழ்ச்சியின் ஆலோசனைக்கூட்டம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற 13.03.2019 புதன்கிழமை முதல்
17.03.2019 ஞாயிற்றுக்கிழமை
வரை நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் 16.03.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 600 க்கும்
மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்று நிகழ்த்தும் நாத சங்கம நிகழ்ச்சியின்
ஆலோசனை கூட்டம் வருகிற 23.02.2019 சனிக்கிழமை காலை
11.00 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி
பீடம் வளாகத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது. பங்கேற்க
விருப்பம் தெரிவித்துள்ள தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களின் பிரதிநிதிகள் அவ்வமையம்
வருகை புரிந்து விழா சிறக்கவும், அனைத்து நகர-கிராம கலைஞர்கள் பங்கேற்க வைக்கவும், விழாவிற்கு தேவையான
ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கவும் விழா கமிட்டியின் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம்
நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு விழா சிறக்க வேண்டுகிறோம்.
04.02.2019
இங்ஙனம்,
வாலாஜாபேட்டை. முப்பெரும் விழா குழுவினர்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
No comments:
Post a Comment