தன்வந்திரி பீடத்தில்சனி பிரதோஷம் சிறப்பு
பூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர
ஸ்வாமிகள் ஆசிகளுடன் சனி மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு இன்று
02.02.2019 சனிக்கிழமை மாலை
4.30 மணி முதல் 6.00 மணி வரை பீடத்தில்
பிரதிஷ்டை செய்துள்ள ‘சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும்
சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.
பிரதோஷ
காலத்தில் சிவபெருமானை ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள
காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும்
பிரதோஷம் 'சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாகக்
கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை) சனிக்கிழமையில் வந்தால் 'மஹாப் பிரதோஷம்" என்று வழங்கப்படுகிறது.
மஹாப்
பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வர்ருக்கும், அவருடைய வாகனமான
நந்தி தேவருக்கும் ஒரே நேரத்தில் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு
மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்று பின் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை பின் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான
பக்தர்கள் பங்கேற்றனர். இன்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment