தன்வந்திரி பீடத்தில்12.02.2019 செவ்வாய்கிழமை
ரதசப்தமியில்
கண்
சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பாவங்கள் நீங்க
சூரியநாராயண ஹோமம்…
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன்
ரத சப்தமியை முன்னிட்டு வருகிற 12.02.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கண் சம்பந்தப்பட்ட நோய்கள்
மற்றும் பாவங்கள் நீங்க சூரியநாராயண ஹோமம் நடைபெறுகிறது.
ரதசப்தமி :
நம் பாரத தேசத்தில்
நம்மை வாழவைத்து கொண்டிருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடி மகிழ்கின்றோம். அதேபோன்று சூரியனுக்கும் ஒரு
ஜெயந்தி தினத்தைக் கொண்டாடி வருகின்றோம். அந்த நாள்தான் ரதசப்தமி தினமாகும். அதாவது
உத்ராயண தை அமாவாசைக்கு பின்வரும் ஏழாவது நாள் (சப்தமிதிதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது.
இந்த ரதசப்தமி
நாளில் தான் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுகிறது, அந்த நாளில் சூரியனுக்கு
விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய
தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். தங்களுடைய
பாவங்களில் இருந்து விடுபட ஆண்கள் சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகள் ஏழு
எடுத்து அத்துடன் அட்சைதயும் (சிறிதளவு பச்சரிசி) விபூதியையும் தலையின்மீது வைத்துக்கொண்டு
கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் (கன்னி மற்றும் சுமங்கலிகள்) ஏழு
எருக்கன் இலைகள் மேல் சிறிதளவு மஞ்சள் தூளையும் அட்சைதையும் வைத்துக்கொண்டு நீராட வேண்டும்.
சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல் நலத்தை
வலுப்படுத்தும் என்பது ஐதீகம்.
ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாக
சொல்லப்படுவது ரதசப்தமி விரதமே. நம் பாவங்கள் விலகி பகலவனைக் கண்டு பனி மறைவது போல
மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.
நாராயணனின் அம்சமே
சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான்
எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது
சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர். பார்வைக்குத் தெரியும்
பகவானை, பகலவனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, “ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!” என்று சொல்லி வணங்கலாம். அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை
குருவாக இருந்து அளித்தவர் சூரியன். சூரியனை பொங்கலன்றும், ரத சப்தமி நாளிலும்
மட்டும் வழிபடாமல் தினமுமே வணங்கலாம். ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள்
விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்!
இத்தனை
சிறப்புகள் வாய்ந்த ரத சப்தமியன்று தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி 12.02.2019 செவ்வாய்கிழமை
காலை 10.00 மணியளவில் சூரிய நாராயண ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதினால் கண்களில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி கண்கள்
பிரகாசமாக இருக்கும், உடலிலும், உள்ளத்திலும் உள்ள மறைமுக பிணிகள் நீங்கும், ஒளிக்கதிர்களினால் நன்மைகள் ஏற்படும், சூரிய பகவானின்
அருள் கிடைக்கும், துன்பங்கள், இன்னல்கள் நீங்கும், சூரிய தசை, சூரிய புக்தி போன்றவைகளால் ஏற்படும் தோஷங்கள்
அகலும், நவக்கிரஹ தோஷங்களும் விலகும்.
எனவே பக்தர்கள்
அனைவரும் இந்த ஹோமத்திலும் பின்னர் நடைபெறும் அன்னதானத்திலும் கலந்து கொண்டு பயன்பெற
அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த பூஜையிலும்,
ஹோமத்திலும் புஷ்பங்கள், பழங்கள், மஞ்சள், குங்குமம், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி
குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment