வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்கண் திருஷ்டி கணபதி யாகம்
கண் திருஷ்டி கணபதி யாகம் :
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 13.09.2018 வியாழக்கிழமை, விநாயக சதுர்த்தியை முன்னிட்டு காலை 10.30 மணியளவில் கண் திருஷ்டியாலும் துஷ்ட சக்திகளாலும் ஏற்படும் நோய்கள் அகலவும், வினைகள் நீங்கி நலம் பெற வேண்டி கண் திருஷ்டி கணபதி யாகமும், விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
கண் திருஷ்டி கணபதி ஹோமத்தில் அஷ்ட திரவியம், உலர்ப்பழங்கள்,
பல வகையான புஷ்பங்கள், எலுமிச்சம் பழம், தேங்காய், 2018 பூசணிக்காய் துண்டுகள், ஊமத்தங்காய், கண்டங்கத்திரி, மஞ்சள், சிகப்பு குங்குமம், நாயுருவி, வெண்கடுகு, கற்பூரம், கடுகு, உப்பு, எள்ளு, கரும்பு,
அருகம்புல், தும்பை பூ, எருக்கம் பூ, அப்பம், மோதகம், சர்க்கரை பொங்கல், கொண்டு கண் திருஷ்டி கணபதி யாகமும், ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் பிரதிஷ்டை செய்துள்ள விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
மேலும் விநாயகருக்கு
சிறப்பு அலங்காரம் செய்து சஹஸ்ர நாமாவலி அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் விநாயகருக்கு
பிடித்த விளாம் பழம், வேர்க்கடலை, கரும்பு, கம்பு, சோளம், மக்காசோளம், கொய்யா பழம்,
கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் சித்ரான்ன்ங்கள் வைத்து நிவேதனம் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.
பலருக்கும் உள்ள கண் திருஷ்டி தோஷங்கள் களையும்
வண்ணம் நடைபெற்றது.
தேனும், இஞ்சியும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து கண் திருஷ்டி கணபதி யாகத்தில் தேனும், இஞ்சியும்
நைவேத்தியமாக படைத்து வருகை புரியும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேற்கண்ட யாகத்தின் மூலமாக தீய சக்திகளிடமிருந்தும், பொறாமை குணம்
கொண்டவர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட்டு உடல் ஆரோக்கியம் பெருகி வாழ்வில் வளத்தை
பெருகச் செய்வார் கண் திருஷ்டி கணபதி என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment