Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, September 18, 2018

Purattasi Thiruvonam - Thiruvona Homam - Thailabishekam...

தன்வந்திரி பீடத்தில்

 புரட்டாசி திருவோணத்தை முன்னிட்டு

 வினைப் பிணி தீர

 விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகமும்

 திருவேங்கடன் அருள் பெற திருவோண ஹோமமும்

 நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற புரட்டாசி திருவோணத்தை முன்னிட்டு, ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 21.09.2018 வெள்ளிக்கிழமை, புரட்டாசி திருவோணத்தை முன்னிட்டு  வினைப் பிணி தீர திருவோண ஹோமத்துடன் விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.  

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. திருவோண விரதம் என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் விரதம் இருப்பதாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. அதனால் தான் பெருமாளுக்கு திருவோண பெருமாள் என்ற பெயரும் உண்டு. மேலும் “திரு” எனும் மஹாலக்ஷ்மியுடன் இருப்பதால், திருமகள் அருளும் இந்நாளில் கிடைக்கிறது. அதனால் தான்  திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள்.

காக்கும் கடவுள், திருவேங்கடவன், திருமால், மலையப்ப சாமி, என்ற பெயர்களில் அழைத்து மகிழ்கின்ற பெருமாளின் அம்சமான ஸ்ரீ தன்வந்திரி பகவான் அருள் பெற்று, மக்கள் நோயின்றி நலமுடன் வாழவும் பலவகையான தோஷங்களில் ஒன்றான சந்திர தோஷம் நீங்கவும், இத் தோஷத்தினால் ஏற்படும் பலவகையான நோய்கள் நீங்கவும், மகிழ்ச்சியான வாழ்வு மலரவும், வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படவும், மனக்குறைகள் அகலவும், பெண்கள் விரும்பியதை அடையவும், திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையவும், நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகவும், நீங்காத செல்வம் நிலைத்து நிற்கவும் வருகிற 21.09.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பிணி தீர்க்கும் பெருமாளான தன்வந்திரிக்கும், வினை தீர்க்கும் பெருமாணான விநாயகருக்கும் தைலாபிஷேகத்துடன் திருவோண ஹோமமும் நடைபெறுகிறது.

எல்லா மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்திருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணத்தில் தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்வது ஆரோக்யத்திற்கும், ஐஸ்வர்யத்திற்கும் மிகவும் சிறப்பாகும்.

திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் புரட்டாசி மாதத் திருவோணம். அதேபோல் சனிபகவான் அவதரித்த தினமும். புரட்டாசி சனிக் கிழமை தான். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி நடைபெறும் திருவோண ஹோமத்தில் கலந்து கொண்டு சனி கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி ஆயுள் விருத்தி பெற்று, கல்வித் தடை, திருமணத் தடை, ஆரோக்யத் தடைகள் நீங்கி, ஐஸ்வர்ய வாழ்வு பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த ஹோமத்தின் நிறைவாக மூட்டுவலி, சக்கரை வியாதி, இருதய நோய், மலச்சிக்கல், வயிறு உபாதைகள், கண் நோய், குடல் சூடு, சொறி சிரங்கு, போன்ற நோய்கள் அகலவும், கர்ம வினைகள் நீங்கவும் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகம் செய்த தைலத்தை வருகை புரிகின்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் இலவசமாக வழங்கி அருளாசி அளிக்க உள்ளார்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment