Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, September 30, 2018

Sudarsana Homam .....


தன்வந்திரி பீடத்தில்சோதனைகள் விலகசுதர்சன ஹோமம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை த்ருஷ்டி உபாதைகள், சத்ரு உபாதைகள் விலகவும், வியாபார அபிவிருத்திக்கும் சுபிட்சங்கள் பலபெற்று வளமுடன் வாழவும், ஸ்ரீ சுதர்சன மஹா யாகம் நடைபெற்றது.

ஸ்ரீ சுதர்ஸன மஹாவிஷ்ணுவை வேண்டி இந்த யாகத்தில் நாயுருவி, வெள்ளை எள்ளு, வெண் கடுகு, சர்க்கரைப்பொங்கல், நெய், குங்குமப்பூ, கருநொச்சி, இருமுள், நீலஊமத்தம்பூ, வெள்ளைப் பூக்கள், பலாசு, அருகம்புல், தேன், குங்கிலியம், பலவகையான மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், முதலிய த்ரவியங்கள் சேர்கப்பட்து. மேலும் யாகத்தில் வைத்து பூஜித்த வெண்ணையை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது.

மேற்கண்ட யாகத்தில் தொழில், வியாபாரம், உத்யோகத்தில்  உயர்வு, சத்ருபாதை  விலக நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் அகல வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கும், பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்களில் இருந்து விடுபடவும், நற்சம்பத்துக்கள் பெறவும், சுக பிரசவம் நடைபெறவும், தடைகள் விலகவும், பசுக்கள் விருத்தி அடையவும், மன நலம் குணமாகவும், தீராத நோய்கள் தீரவும், கோபங்கள் தனியவும், சாபங்கள் விலகவும், பிறரிடம் அன்பு ஏற்படவும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த யாகத்தில் சென்னை மெட் இந்தியா மருத்துவமனை பிரபல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் T.S. சந்திரசேகர் அவர்கள் குடும்பத்தினர்களுடன் பங்கேற்று, ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனாழ்வாருக்கு நவகலச திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment