வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்இரண்டு முறை குருப் பெயர்ச்சி மகா யாகம்.
வருகிற 04.10.2018 மற்றும் 11.10.2018 நடைபெறுகிறது.
தற்போது குருபகவான் மேஷ ராசிக்கு ஏழாமிடமான துலாம்
ராசியிலிருந்து எட்டாமிடமான விருச்சிக ராசிக்கு 11.10.2018 தேதி வியாழக்கிழமை
பிறகு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆக போகிறார். வாக்கியப்படி பிரகாரம் 04.10.2018 வியாழக்கிழமை
பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 04.10.2018, வியாழக்கிழமை
மாலை 6.30 மணி முதல்
இரவு 10.30
மணி வரை, மற்றும்
11.10.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இரண்டு நாட்கள் பக்தர்களின்
வேண்டு கோளுக்கிணங்க குருப்பெயர்ச்சி
மஹாயாகம் மற்றும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு
அபிஷேகம் விசேஷ பூஜைகள், தன்வந்திரி பீடத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அனுக்கிரக குரு பகவான் :
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டையில் இருந்து
3 கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்துள்ளது. இப்பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர் மற்றும் ஸ்ரீ
ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் என்ற பெயர்களுடன் 468 சித்தர்கள் மற்றும்
75 விதமான பரிவார மூர்த்திகளுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து
வருகின்ற ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ வல்லலார், காஞ்சி மஹாபெரியவர்,
ஸ்ரீ ராகவேந்திரர், சீரடி சாயிபாபா சன்னதிகள் அருகே,
குரு பீடத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும்
வகையில் அனுக்கிரக தக்ஷிணாமூர்த்தியாக வீற்றிருந்து
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத
தனிச்சிறப்பாகும்.
மேற்கண்ட அனுக்கிரக குருபகவானுக்கு வியாழக்கிழமை மற்றும் குரு
பெயர்ச்சி நாளில் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்கள்
கொண்டு அர்ச்சனை செய்து கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம்
செய்வது சிறப்பு தரும். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலைப்பொடி சாதம்,
வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் பலவிதமான நன்மைகள்
ஏற்படும். மேலும் மநக்குறைகளும் நீங்கும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள்.
மனித
வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம் எல்லாமே
பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான
பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப்
போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான்
பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.
அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம்
குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.
குருபகவான் ராசி
மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது,
ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம
ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது.
குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து
இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே
குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.
இப்படி
நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். இந்த ஆண்டு
குருப்பெயர்ச்சி வாக்கிய
பஞ்சாங்கப்படி 04.10.2018
வியாழக்கிழமையன்றும் 11.10.2018 வியாழக்கிழமையன்றும்
திருக்கணித பஞ்சாங்கப்படியும் குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு
இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
அசுப பலன்களின்
தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி,
அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி
மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம்
இராசி நேயர்கள் குருபுத்தி
குருதிசை, நடைபெறும் அன்பர்கள்
பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு.
இந்த குரு பெயர்ச்சி யாகத்தில் வைத்திய
குருவும் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் யந்திரம், டாலர், மற்றும் புகைப்படம் வைத்து ஹோம பூஜைகள் நடைபெற
உள்ளது. இந்த
பிரசாதங்கள் வேண்டுபவர்கள் மற்றும் ஹோம சங்கல்பத்தில் பங்கேற்க விருப்பம்
உள்ளவர்கள் நபர் ஒருவருக்கு ரூபாய்
500/- செலுத்தி பிரசாதம் பெற்று கொள்ளலாம். இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் பெற விரும்பும் நபர்கள் கூரியர் கட்டணம் ரூபாய் 100/- கூடுதலாக அனுப்பி பெற்று கொள்ளலாம். வெளிநாட்டில்
வாழ்பவர்கள் மேற்கண்ட குரு பெயர்ச்சியில் பங்கேற்க விரும்பினால் கீழ்கண்ட
முகவ்ரியில் தொடர்புகொள்ளவும்.
குருப்பெயர்ச்சி
மகா யாகத்தில் பங்கேற்கும் ஆன்மிக ஆன்றோர்கள், ஜோதிட நிபுணர்கள், ஆலய
அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் விழா மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
10 கீழ்புதுப்பேட்டை,
தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை 632513
தொலை பேசி. 04172- 230033,230274,9443330203
Email: danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment