தன்வந்திரி
பீடத்தில் இருவேறு
ஹோமங்கள்
ஷஷ்டி சத்ரு சம்ஹாரம் - சனி சாந்தி ஹோமம்
நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 01.09.2018 சனிக்கிழமை மற்றும் ஷஷ்டி திதியை முன்னிட்டு, தன்வந்திரி
பீடத்தில் சத்ரு சம்ஹார ஹோமத்துடன் சனி சாந்தி ஹோமம்
நடைபெற்றது.
சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் சனி சாந்தி ஹோமம்
விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மூலவர் ஸ்ரீ கார்த்திகை பெண்களுடன்
உள்ள குமரனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து செவ்வரளி மாலை
அணிவித்து புஷ்பங்களால் அர்ச்சனையும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மஹா அபிஷேகம்
நடைபெற்று சனி சாந்தி ஹோமமும் நடைபெற்றது.
ஹோமங்களில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு சத்ரு தொல்லை நீங்கி இழந்த பதவிகள் பெறவும் வாழ்வில்
முன்னேற்றம் பெறவும் பூர்வ வினை, பாவம் போகவும், குறைவில்லாத, வளமையான வாழ்வும், பூமி தோஷம் நீங்கவும், புற்று நோய் அகலவும், வேலை வாய்ப்பு
பெறவும், புத்திர தோஷம் நீங்கவும், ஆயுள் தோஷம் அகலவும்,
சனி திசை, சனி புக்தியால் ஏற்படும் பிரச்சனைகள் அகலவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த தகவலை
ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment