Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, September 18, 2018

Karthyayani Homam.....

தன்வந்திரி பீடத்தில் பௌர்ணமியில்

கல்யாண வரம் தரும் காத்யாயனி யாகத்துடன்

குழந்தை வரம் தரும் கோபால யாகம்

நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 24.09.2018 திங்கள்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்-பெண் திருமணத் தடை நீங்க காத்தயாயனி யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.

தெய்வீக மனம் கமழும் ஸ்ரீ தன்வந்திரி பீடம் :

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் தினசரி ஹோமங்களாலும், மந்திர ஜபங்களாலும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆத்மார்த்த பூஜைகளின் மூலமாகவும், ஸ்ரீ தன்வந்திரி பகவானின் பார்வையினாலும், ஹோம புகையினாலும், மூலிகை விருட்சங்களாலும், பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி ஸ்ரீ தன்வந்திரி மந்திரத்தின் அதிர்வுகளாலும், பல்வேறு தெய்வங்களின் தெய்வீக தன்மையினாலும், புனித பூமியினாலும், இங்கு வருகை புரியும் புனித ஆத்மாக்களாலும் இத்தலத்திற்கு பல்வேறு வகையிலும் ஆகர்ஷணங்கள் ஏற்பட்டு வளாகம் முழுவதும் அதிர் வலைகளை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது இந்த மஹா ஆரோக்ய பீடம். இச்சிறப்பின் மூலமாக இங்கு நடைபெறும் யாக பூஜைகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்து வருகிறது. மேலும் பங்கேற்கும் நபர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் செல்கின்றனர்.

இப் பீடத்தில் பிரதி மாதம் பௌர்ணமியில் குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை வரம் வேண்டி சந்தான பரமேஸ்வரர் யாகம், சந்தான கோபால யாகம், நவநீத கிருஷ்ணர் யாகம், போன்ற யாகங்களும் திருமணம் ஆகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ யாகமும், பெண்களின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டி சுயம்வர கலாபார்வதி யாகம், காமேஸ்வரி துளசி யக்ஞமும் காத்யாயனி யாகம், மங்கள கௌரி யாகம் போன்ற யாகங்கள் பக்தர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு நடைபெற்று வருகிறது.

இந்த யாகங்களில் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம் அகலவும், கால சர்ப தோஷம், பித்ரு தோஷங்கள் நீங்கவும், பல்வேறு வகையான மந்திரங்களை உச்சரித்து நூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன் கொண்டு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி  நடைபெறுகிறது.

காலச்சக்கிர பூஜையுடன் விருக்ஷ பூஜை :

திருமணத் தடை உள்ள ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தை வரம் வேண்டி உள்ள தம்பதிகளும், இங்கு காலசக்கிரமாக அமைந்துள்ள நக்ஷத்திர விருட்சங்களுக்கு விருட்ச பூஜை செய்து 3, 9, 12 என்ற முறையில் வலம் வந்து நக்ஷத்திர தோஷங்கள் நீங்க முதலில் பூஜை நடைபெற்று சங்கல்ப பூஜைகள் நடைபெறும்.

ஜன்ம பத்திரிகா பூஜை:

இரண்டாவதாக மேற்கண்டவர்களின் ஜாதகங்கள் ( இல்லை என்றால் பரவாயில்லை ) ஜென்ம பத்ரிகாவை அம்பாள் மடியில் வைத்து, அர்ச்சனை செய்து ஜாதக தோஷங்கள் விலகிட வேண்டி பிரார்த்தனை  செய்து, யாகங்கள் நடைபெறுகிறது.

கலசாபிஷேகமும் தொட்டில் பூஜையும் :

யாகம் நடைபெற்ற பின் திருமணம் ஆகாத ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகமும், குழந்தை வரம் வேண்டி வந்துள்ள தமபதிகள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணை சார்த்தும் வைபவமும், தொட்டில் பூஜையும் நடைபெற உள்ளது.

முக்கிடி கஷாயமும் வெண்ணை பிரசாதமும் :

இப்பூஜையில் பங்கேற்கும் நபர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் யாகங்களில் வைத்த ஸ்ரீ தன்வந்திரி பகவானின் விசேஷ பிரசாதமான முக்கிடி கஷாயமும், வெண்ணையும் அளித்து அருளாசி வழங்க உள்ளார்.

சிறப்பு அன்னதானம் / பௌர்ணமி பிரசாதம் :

இந்த யாகங்களில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் வாழை இலை கொண்டு சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது.

இந்த யாகங்களில் கலந்து கொள்பவர்களுக்கு அடுத்த ஆறு மாதத்துக்குள் திருமணம், குழந்தை பேறு கைகூடுகிறது. அப்படி பலன் அடைந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு வந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும் இதர 75 பரிவார தெய்வங்களையும் தரிசித்து அவரவருடைய பிரார்த்தனைகளை நிறைவு செய்கிறார்கள்.

ராகு-கேது அன்னாபிஷேகம் :

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏக சரீர ராகு – கேதுவுக்கு மாலை 5.00 மணி அளவில் அன்னதோஷம் விலகவும், உணவு செரிமானம் ஏற்படவும், வயிறு உபாதைகள் நீங்கவும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
மேற்கண்ட யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்பவர்களுக்கு நோய்கள் நீங்கி நல்ல ஆரோக்யம் பெற்று விரைவில் திருமணம், குழந்தை பாக்யம், பெற்று ஆரோக்யத்துடன் சந்தோஷமான வாழ்வு, தொழில் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி, ஆகியவைகளில் நற்பலன்கள் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்கிறோம்.

இதில் பங்கேற்க விரும் பக்தர்கள் மூலிகைகள், நெய், அரிசி, வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், மளிகை பொருட்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment