வாத நோய்கள் தீர வாலாஜாபேட்டையில்
வைத்திய ராஜன் தன்வந்திரிக்கு
108 மூலிகை தீர்த்தாபிஷேகம் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் புரட்டாசி ஏகாதசியை முன்னிட்டு, வருகிற 20.09.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல்
1.00 மணி வரை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வைத்திய ராஜன் ஆன மூலவர்
ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு, வாத நோய்கள் உட்பட பல வகையான நோய்கள் தீர நெல்லிப் பொடியுடன்
108 மூலிகை தீர்த்த அபிஷேகமும் சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் :
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில்
வாலாஜாபேட்டை பஸ் நிலயத்தில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் 3 வது கிலோ மீட்டர்
தொலைவில் கீழ்புதுப்பேட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்.
பெற்றோர்களுக்கு ஆலயம் :
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், தன்னுடைய தாய்க்கு கொடுத்த சத்தியத்தின் பேரில்
அமைக்கப்பட்டுள்ளது தான் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். ஆகவே இப் பீடத்தில் ஸ்வாமிகளின்
பெற்றோருக்கும் ஆலயம் அமைத்துள்ளார்.
ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் :
ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுடன் ஒரே கல்லில் 14 விக்கிரகங்களுடன்
6 அடி உயரத்தில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், 4 அடி உயரத்தில் பெரிய திருவடி சிறிய திருவடியும்
பூஜை செய்யும் விதமாக ஸ்ரீ சத்ய நாராயண பெருமாள், 4 அடி உயரத்தில் கூர்ம அவதாரத்துடன்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ( இரண்டு விதமான கற்களால் ஆனது ), 4 அடி சக்கிரத்தாழ்வார், 8 விதமான நாகங்களுடன் அஷ்ட நாக கருடர், வெளிர்பச்சை
கல்லினால் செய்யப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், 9 அடி உயரத்தில் திறந்த வெளியில் சஞ்சீவி
ஆஞ்சநேயருடன் 9 படிகளில் 9 விதமான ஆஞ்சநேயர், ஸ்ரீ செந்தூர அஞ்சநேயர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர்,
16 கைகளுடன் பச்சை நிற கல்லில் செய்யப்பட்ட ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் போன்ற 75 சன்னதிகளுடன்
சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் பிரதிஷ்டை செய்து தினசரி பல்வேறு தேவைகளுக்காக
பல்லாயிர கணக்கான யாகங்களை கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு ஏகாதசி தோறும்
மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப் பொடியுடன் பல்வேறு மூலிகைகள் கொண்டு நோய்கள்
நீங்க சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.
“அஜா’’ ஏகாதசி (20.09.2018)
சிறப்பு :
புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை “அஜா’’ ஏகாதசி (20.09.2018)
என்று அழைக்கப்படுகிறது. இவ்விரதநாளில் விரதம் இருந்து தன்வந்திரி
பெருமாளை சேவித்து வந்தால் குடும்பத்துடன் ஆரோக்யமாகவும், மகிழ்ச்சியாக இருக்கலாம்.
புரட்டாசி ஏகாதசி விரதமும் பலன்களும் :
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து
ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை
அடைவர்.
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா’’ ஏகாதசி (வெள்ளிக்கிழமை
05.10.2018) என்று அழைக்கப்படுகிறது.
ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும்
வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது.
நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர்
வற்றாமல் பெருக்கெடுக்கும், இயற்கை வளம் பெறும், தெய்வீக அருள் கூடும்.
புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அஜா’’ ஏகாதசி (20.09.2018)
என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாளில்தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து தாம் இழந்த நாடு, மனைவி மற்றும்
மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே நாமும் இவ்விரத நாளில்
விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக
இருக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏகாதசி திதியில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
நடைபெறும் நெல்லிப் பொடி மற்றும் 108 மூலிகை தீர்த்த அபிஷேகத்திலும் யாகத்திலும் பங்கேற்று
உடல் ரீதியாக ஏற்படும் நோய்களில் இருந்தும், மனரீதியாக ஏற்படும் நோய்களிலிருந்தும்
நிவாரணம் பெற்று மேற்கண்ட அனைத்து விதமான பலன்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் நிறைவான
செல்வத்துடன் ஆன்ந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம். இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment