Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, September 15, 2018

பிளாச்டிக் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.


தன்வந்திரி பீடத்தில்
பிளாச்டிக் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.

தன்வந்திரி பீடத்தில் அரசு தடை செய்யப்பட்டுள்ள பிளாச்டிக் பொருட்களை பயன் படுத்த கூடாது என்பதனை வலியுறுத்தியும், பக்தர்கள் மற்றும் சேவார்த்திகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 13.09.2018 வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஸ்ரீ ராஜலக்ஷ்மி அரங்கத்தில், “கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சேவை செய்யும் சேவார்த்திகளுக்கும், தன்வந்திரி குடும்பத்தினருகளுக்கும் சமீபத்தில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசு ஆணைப்படி 01.01.2019 முதல் தடை செய்யப்பட உள்ள பிளாச்டிக் பொருட்களை ஆரோக்ய பீடத்தில் பயன்படுத்த கூடாது என்பதினை விளக்கவும், அதனால் ஏற்படும் தீமைகளை விளக்கவும் மேலாளர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மேலும் எவ்வாறு பக்தர்களுக்கு கொண்டு சேர்த்து அவர்களின் ஒத்துழைப்பு நல்குவது அரோக்ய பீடத்தில் வளாகத்தில் பிளாச்டிக் பொருட்களை பயன்படுத்தவும், கொண்டுவரவும் கூடாது என்பதினை வலியுறுத்தியும் எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகளை ஆலோசிக்க தன்வந்திரி குடும்பத்தினர் சார்பாக ஆலோசிக்க பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

1.   அரசு கொண்டு வந்துள்ள தடை ஆணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தல்.
2.   சுற்றுபுற கிராம மக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள பிளாச்டிக் பொருட்களால் ஏற்[அடும் விளைவுகளை எடுத்து கூறவும் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்த செய்தல்.
3.   தன்வந்திரி பீடம் வளாகங்களையும், சன்னதிகளையும் சுற்றுபுற இடங்களையும் மேலும் தூய்மையாக வைத்து கொள்ளுதல்.
4.   தடை செய்யப்பட்ட பிளாச்டிக் பொருட்களை எந்த விதத்திலும் பயன்படுத்த கூடாது எனபதை வலியுறுத்தல்.
5.   ஆரோக்ய பீட வளாகத்தில் வருகை புரியும் பக்தர்களுக்கு தெளிவாக தெரியும் வண்ணம் இங்கு பிளாச்டிக் தடை செய்யப்பட்டுள்ளது, பிளாச்டிக் இல்லா ஆரோக்ய பீடம்போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள், அறிவிப்பு பலகைகள் வைத்தல்.
6.   பீடத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் அனைத்து முகவர்கள், வியாபாரிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாச்டிக் பொருட்கள் இல்லாமல் பொருட்களை விநியோகம் செய்யும்படி கேட்டு கொள்ளுதல்,
7.   ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் ஹோமத்திற்கும் பூஜைக்கும் பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களில் பிளாச்டிக் இல்லாமல் கொண்டு வரும்படி அவர்களுக்கு தெரிவித்தல்.
8.   பக்தர்களுக்கு அளிக்கும் பிரசாதங்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாச்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.
9.   பிளாச்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை எடுத்து கூற குழு அமைத்தல்.
10. தன்வந்திரி பீடத்தில் நடத்தும் அன்னதானங்களில் தடை செய்யப்பட்ட பிளாச்டிக் பொருட்கள் இல்லாமல் பார்த்து கொள்ளுதல்.
11. தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு வரும் தொழிலாளிகள் கொண்டு வரும் உணவு பொருட்களில் (டீ கவர், டிபன் கவர், சாம்பார் கவர், சட்னி கவர்) போன்ற பல்வேறு பிளாச்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதினை அவர்களுக்கு அறியுறுத்தல்.
12. குடிநீர் பாட்டில்கள், குளிர்பானம் பாட்டில்கள் போன்றவைகளை பீட வளாகத்தில் அனுமதிக்காமல் இருத்தல்.
13. மேலும் பல்வேறு வழிகளில் தடை செய்யப்பட்ட பிளாச்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய வழிவகைகள் செய்தல். சுற்றுபுற சூழலுக்காக ISO 9001:2015 தரசான்றுதல் பெற்றுள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், மேலும் சிறப்பான முறையில் பக்தர்களுக்கு சேவை செய்யவும், அரசு கொண்டுவந்துள்ள தடை ஆணைக்கு பூர்ண ஒத்துழைப்பு அளித்து வரவும் மேற்கண்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதில் சேவார்த்திகள், தன்வந்திரி குடும்பத்தினர்கள் கலந்துகொண்டனர்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment