கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Friday, August 31, 2018
Wednesday, August 22, 2018
Ashtami Bhairavar Yagam.....
தன்வந்திரி பீடத்தில்
ஐஸ்வர்யம் தரும் அஷ்ட பைரவர் யாகம்
வருகிற 03.09.2018 திங்கட்கிழமை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆக்ஞைப்படி வருகிற
03.09.2018 திங்கட்கிழமை தேய்பிறை அஷடமியை முன்னிட்டு, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி
வரை ஐஸ்வர்யம் தரும் அஷ்ட பைரவர் ஹோமமும் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
.
அகங்காரத்தை
அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும்
பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள்
யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் நன்மையாக முடியும்
என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மேலும் தீராத
வியாதிகள் தீரவும், நம்மை சூழ்ந்திருக்கும் பீடைகள்
ஒழியவும். கெட்ட அதிர்வுகள் விலகவும், மன அமைதியே இல்லாதவர்களுக்கு
மன அமைதி கிடைக்கவும் பைரவர்
துணையுடன் செல்வவளம்
பெருகவும் துன்பம் விலகி வாழ்க்கையில்
சுபிட்சம் உண்டாகவும் ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடவும் சகல
தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டவும். சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும், பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும்
கண்காணிக்கும் ஆதி தெய்வமான பைரவரின் அருள் கிடைத்திட தேய்பிறை அஷ்டமி தினத்தில்
அஷ்ட பைரவர் யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது.
உலகில் எங்கும்
இல்லாதவாறு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர்களான ருரு பைரவர்,
சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி மஹா கால பைரவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும்
ஆதிசைவர்கள் வணங்கி வந்துள்ளா 64 விதமான பைரவர்களை நாம் வழிபடும்
விதத்திலும் அஷ்ட பைரவர்களே அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள். அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு பூஜையுடன் மிளகு தீபம், கூஷ்மாண்ட தீபம், நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு
விருப்பமான தாமரை, வில்வம், தும்பை, அரளி, மற்றும் செவ்வந்தி, பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெறவுள்ளது.
நீலநிற மேனியரான
பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம்,
பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம
சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பலவாறு ரூபம் கொண்டவர். என்று பல திருப்பெயர்கள் பைரவருக்கு இருப்பதாக
புராணங்கள் கூறுகின்றன.
எட்டு தேய்பிறை
அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில்
சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. வருகிற 03.09.2018 தேய்பிறை அஷ்டமி நாள் அன்று துக்கங்கள்
யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை மேற்கொள்ளலாமே? என்கிறார் நமது ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
Ekadasi Amla Powder Abhishekam - Vastu Homam....
வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வாஸ்து ஹோமத்துடன்
தன்வந்திரி
பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில், துன்பங்கள்
துயரங்கள் அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று
22.08.2018 காலை 10.00 மணி முதல் மஹா தன்வந்திரி ஹோமமும்
மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெற்றது.
இதில் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு,
மிளகு, திப்பிலி, நல்லெண்ணை,
பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள்,
நிவேதன பொருட்கள் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வாஸ்து நாளான இன்று
வாஸ்து ஹோமம் நடைபெற்றது.
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் :
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி
விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச
பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ
பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று
பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு
ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி சயன கோலத்தில் அருள் பாலித்துக்
கொண்டிருக்கும் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வாஸ்து என்கிற வார்த்தைக்கு வஸ்து என்று பொருள். வஸ்து என்பது நாம் வசிக்கும்
பூமி, நிலம் மற்றும் அதில் உள்ள பொருகளாகும். வஸ்துவில்
இருந்து வந்தது தான் வாஸ்து எனலாம். பூமி, நிலம் போன்ற பொருள்களில் இருந்து கிடைக்கும் மண்,
கல், சிமெண்ட், இரும்பு,
மரம் போன்ற வஸ்துக்களை கொண்டு, நாம் நமக்காக இருப்பிடம்
அமைத்து கொள்ள விரும்பும் போது நாம் பார்ப்பது தான் வாஸ்து சாஸ்திரம் ஆகும்.
வாஸ்து நாளான இன்று 22.08.2018 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை, வாஸ்து தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், பூர்ண வாஸ்துப்படி நாம் வாழும் இடங்களை மாற்றி அமைத்து கொள்ளவும். வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் போராட்டங்கள் நீங்கி மன உளச்சலில் இருந்து வெளியேறி வாழ்க்கை பிரகாசமாக வாழ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சாந்தி பூஜைகளும் நடைபெற்றது.
வாஸ்து ஹோம பிரசாதம் : இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து
யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண்
வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி
பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tuesday, August 21, 2018
Karthaveeryarjuna Homam......
தன்வந்திரி பீடத்தில்கேரள மாநில மக்களின் நலன் கருதிசிறப்பு ஹோமங்கள் - கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், இன்று
21.08.2018 செவ்வாய்கிழமை காலை 11.30
மணி
முதல் 2.00
மணி
வரை, கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு அடைந்துள்ள கேரள மாநில மக்கள்
நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர், “கயிலை ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.
தன்வந்திரி
பீடத்தில் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் :
வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்
பச்சை கல்லினால் 4அடி உயரத்தில் பாதரக்ஷை, சுதர்சன சக்கிரம், கதை, போர் வாள்,
சங்கு மற்றும் சக்கிரத்துடன் துடிப்புள்ள மீசையுடன் காவல் தெய்வமாகவும்
மஹாராஜாவாகவும் அர்ஜுனராகவும் நின்ற கோலத்தில் 16 திருக்கரங்களுடன்
வரும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் புரிந்து வரும் வகையில் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனி ஆலயம் அமைத்துள்ளார் தேவர்களை அடக்கி
ஆண்டவரும், மன்னன் ராவணனையை அடக்கி ஆளக்கூடிய வலிமை கொண்டவரும்,
அதீத சக்தி பெற்றவருமான இவருக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கார்த்தவீர்யார்ஜுன
ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் இழந்த பொருட்களை திரும்ப கிடைக்க வேண்டி பூஜைகள் நடைபெற்று
வருகின்றன.
கேரள
மாநில மக்களின் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனை :
இயற்கை
சீற்றத்தினால் பாதிக்கபட்ட கேரள மாநில மக்கள் துயரத்திலிருந்து விலகவும், இயற்கையின் சீற்றம் குறையவும், நோய்கள் வராமல் இருக்கவும்,
நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் நோயிலிருந்து விடுபடவும், மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும், இழந்தவைகளை பெறவும் தேவைகள் பூர்த்தி அடையவும், தடைகள்
நீங்கி தொடர்ந்து நன்முறையில் செயல்படவும், சுகாதாரம்,
தூய்மை, இயற்கை வளம் மற்றும் செல்வ செழிப்பு பெற்று
நலமுடன் வாழ தேவர்களை அடக்கி ஆண்டவரும், மன்னன் ராவணனையை அடக்கி
ஆளக்கூடிய வலிமை கொண்டவரும், அதீத சக்தி பெற்றவருமான கார்த்தவீர்யார்ஜுனரை
வேண்டியும் மனநோய் உடல் நோய் தீர்க்கும் பெருமாளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டியும்
சிறப்பு தன்வந்திரி ஹோமமும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன ஹோமமும்,
விசேஷ பூஜைகளும், கூட்டு பிரார்த்தனைகளும், கேரள மாநில மக்களின் நலன் கருதி தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் சென்னை அம்பத்தூர் சாய் பக்தர் திரு. சேஷாசாய் அவர்கள்
குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஸ்ரீ
கார்த்தவீர்யார்ஜுன ஹோமத்தின் சிறப்பு:
கார்த்தவீர்யார்ஜுன
ஹோமத்தின் மூலம் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம். நிலம்,
பூமி, வீடு திரும்ப கிடைக்கும். வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வரும். முன்னோர்கள் சாபங்கள்,
தோஷங்கள் விலகும். பழைய பெயர், புகழ், மரியாதை மீண்டும் கிடைக்கும். மூதாதையர் நியாயமான முறையில் சம்பாதித்து கொடுத்த சொத்துக்களும் செல்வங்களும்
திரும்ப பெறலாம். இழந்தவை
அனைத்தும் மீண்டும் கிடைக்க பெறும். ஆதாரம் இல்லாததிற்கு ஆதாரமாக
விளங்கும். வரா கடன் வசூலாகும். கல்வியில்
கவனம் கூடும். இந்த யாகத்தில் 30 வகையான புஷ்பங்கள், தாமரை மலர்கள், உலர்ந்த
திராட்சை பழம், முந்திரி, பாதாம் பருப்பு, பேரிச்சம் பழம், 108 வகையான மூலிகைகள், பழ
வகைகள், நெய், தேன், சித்ரான்னங்கள் சேர்க்கப்பட்டு பூர்ணாஹுதி நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Sunday, August 19, 2018
Karthaviryarjuna Homam - Danvantri Homam....
தன்வந்திரி பீடத்தில் 21.08.2018 செவ்வாய்க்கிழமை காலை
கேரள மாநில மக்களின் நலன்
கருதி சிறப்பு ஹோமங்கள் - கூட்டு
பிரார்த்தனை நடைபெறுகிறது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், வருகிற
21.08.2018
செவ்வாய்கிழமை
காலை 11.30
மணி
முதல் 2.00
மணி
வரை, கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு அடைந்துள்ள
கேரள மாநில மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தின் ஸ்தாபகர், “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்று நடத்தும் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி
ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.
தன்வந்திரி
பீடத்தில் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் :
பரசுராமரை
எதிர்த்து போரிட்டவரும், தத்தாத்ரேயரின் பரம சீடரும், ராவணனை விட மேலான பராக்ரமம் கொண்டவரும்,
விஷ்ணு தவிர பிறரால் அழியா வரம் பெற்றவரும், அனைத்துலகங்களையும்
ஆளும் வரம் பெற்றவரும், 85,000 ஆண்டுகள்
ஹைஹேயப் பேரரசின் சக்கரவர்த்தியாக பூவுலகை ஆட்சி செய்தவரும்,
ஆயிரம் கைகள் கொண்டவரும், ஸ்ரீ சுதர்சனர் அம்சமானவரும், சஹஸ்ரார்ஜுனர் என்றும், இழந்த
பொருளை மீட்கும் பெருமாள் என்றும், ஆயிரவல்லி என்றும், க்ஷத்ரீயர்களின் ராஜா என்றும்,
தொலைந்த பொருட்கள் திரும்ப தரும் கடவுள் என்றும் போற்றப்படுகின்ற ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு,
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனி ஆலயம்
அமைத்துள்ளார்.
ஸ்ரீ
கார்த்தவீர்யார்ஜுனர் பச்சை கல்லினால் 4அடி உயரத்தில்
பாதரக்ஷை, சுதர்சன சக்கிரம், கதை, போர் வாள், சங்கு மற்றும் சக்கிரத்துடன் துடிப்புள்ள
மீசையுடன் காவல் தெய்வமாகவும் மஹாராஜாவாகவும் அர்ஜுனராகவும் நின்ற கோலத்தில் 16 திருக்கரங்களுடன்
வரும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் புரிந்து வருகிறார். தேவர்களை அடக்கி ஆண்டவரும்,
மன்னன் ராவணனையை அடக்கி ஆளக்கூடிய வலிமை கொண்டவரும், அதீத சக்தி பெற்றவருமான இவருக்கு
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கார்த்தவீர்யார்ஜுன ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் இழந்த
பொருட்களை திரும்ப கிடைக்க வேண்டி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கேரள
மாநில மக்களின் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனை :
இயற்கை
சீற்றத்தினால் பாதிக்கபட்ட கேரள மாநில மக்கள் துயரத்திலிருந்து
விலகவும், இயற்கையின் சீற்றம் குறையவும், நோய்கள் வராமல் இருக்கவும்,
நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் நோயிலிருந்து விடுபடவும், மீண்டும் புத்துணர்ச்சி பெற்று
மகிழ்ச்சியுடன் வாழவும், இழந்தவைகளை பெறவும் தேவைகள்
பூர்த்தி அடையவும், தடைகள் நீங்கி தொடர்ந்து நன்முறையில்
செயல்படவும், சுகாதாரம், தூய்மை, இயற்கை வளம் மற்றும் செல்வ
செழிப்பு பெற்று நலமுடன் வாழ தேவர்களை அடக்கி ஆண்டவரும்,
மன்னன் ராவணனையை அடக்கி ஆளக்கூடிய வலிமை கொண்டவரும், அதீத சக்தி பெற்றவருமான கார்த்தவீர்யார்ஜுனரை வேண்டியும் மனநோய் உடல் நோய் தீர்க்கும் பெருமாளான
ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டியும் சிறப்பு தன்வந்திரி ஹோமமும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன ஹோமமும், விசேஷ பூஜைகளும், கூட்டு பிரார்த்தனையும்
தன்வந்திரி பீடத்தில் வருகிற 21.08.2018 செவ்வாய்கிழமை காலை 11.30 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீ
கார்த்தவீர்யார்ஜுன ஹோமத்தின் சிறப்பு:
கார்த்தவீர்யார்ஜுன
ஹோமத்தின்
மூலம் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம். நிலம், பூமி, வீடு திரும்ப கிடைக்கும். வாழ்க்கை
நல்ல நிலைமைக்கு வரும். முன்னோர்கள் சாபங்கள், தோஷங்கள் விலகும். பழைய பெயர், புகழ்,
மரியாதை மீண்டும் கிடைக்கும். மூதாதையர் நியாயமான முறையில் சம்பாதித்து கொடுத்த சொத்துக்களும்
செல்வங்களும் திரும்ப பெறலாம். இழந்தவை அனைத்தும்
மீண்டும் கிடைக்க பெறும். ஆதாரம் இல்லாததிற்கு ஆதாரமாக விளங்கும். வரா கடன் வசூலாகும்.
கல்வியில் கவனம் கூடும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
Thursday, August 16, 2018
Subscribe to:
Posts (Atom)