தன்வந்திரி பீடத்தில்இருவேறு ஹோமங்கள்
வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி ஹோமமும்,வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் யாகமும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 23.04.2018 திங்கட் கிழமை வாஸ்து நாள் மற்றும் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு
காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில்
பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து
பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் காலபைரவருக்கு சிறப்பு ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற்றது.
காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள்,
சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து
தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக்
கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், காலபைரவர் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும்
என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தன்வந்திரி பீடத்தில் இன்று வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி
பூஜையும், காலபைரவர் வழிபாடும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம்,
மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை பங்கேற்கும் பக்தர்களுக்கு
பிரசாதமாக வழங்கப்பட்டது. .இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment