தன்வந்திரி பீடத்தில்ஷஷ்டி சத்ரு சம்ஹார ஹோமம்
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை
தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 06.04.2018 வெள்ளிக்கிழமை
காலை 10.00 மணி
முதல் 12.00 மணி
வரை குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் சத்ரு
உபாதைகள் அகலவும், நோய்கள் அகலவும், எதிரிகள் விலகவும் மேற்கண்ட யாகம் நடைபெறவுள்ளது.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள்,
சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை
வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த யாகமாகும். மேலும் விரும்பிய பலனைப்
பெறலாம்.
கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில்
குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள். பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம்,
உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.
கார்த்திகைப் பெண்களுக்கு வேலூர் மாவட்டம்
வாலஜாபேட்டையில் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய்
என்று அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும்
விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார்
என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே
உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த
முகத்துடன் ஞானக் குழந்தையாக 468
சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில்
விக்ரஹம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
பிரதி மாதம் சஷ்டி, கிருத்திகை, விசாகம்,
போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் வருகிற 06.04.2018ல் ஷஷ்டியை முன்னிட்டு நடைபெறும்
சத்ரு ஸம்ஹார ஹோமத்திலும், தொடர்ந்து
நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையிலும், அபிஷேகத்திலும், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும்,
கார்த்திகை பெண்களையும், 468
சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்து நிவாரணம்
பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632
513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 230033, மொபைல்: 94433 30203,
No comments:
Post a Comment