மழை வேண்டியும்
மத நல்லிணக்கம், மனித நேயம் வளரவும்
நீர் நிலை
ஆதாரங்கள்
சிறப்படையவும்,
இயற்கை வளம்
பெறவும்
விவசாய
பெருமக்கள்
மகிழ்ச்சியடையவும்.
தன்வந்திரி பீடத்தில் புத்தாண்டு சிறப்பு ஹோமம்
நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞப்படி இன்று
14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு
மகா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ மகா லஷ்மி யாகமும் ஸ்ரீ
விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
அனைத்து மக்களும் நோய் நொடிகளின்றி ஆரோக்யமாக வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், உத்தியோகம், சிறக்கவும், குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படவும் குழந்தைகள் முழு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல் கல்வி சேரவும், நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும், இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும், மேலும் மழை வேண்டியும் மதநல்லிணக்கம், மனித நேயம், மனித தர்மம் வளரவும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞப்படி சிறப்பு தன்வந்திரி ஹோமமும் ஸ்ரீ மகாலஷ்மி யாகமும் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இந்த யாகத்தில் பலவகையான மலர்கள், பட்டு வஸ்திரம், நெய், தேன், வெண்கடுகு, வால்மிளகு, சீந்தல்கொடி போன்ற 108 விதமான மூலிகைகளும் சேர்க்கப்பட்டது. பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள் பிரசாதம் வழங்கினார்.
மேலும் நாளை
15.04.2018 ஞாயிற்று கிழமை அமாவசையை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சரப சூலினி பிரத்யங்கிரா
யாகம், திருஷ்டி தோஷம், செய்வினை அகலவும் ஆரோக்யம் ஐஸ்வர்யம் பெறவும் நடைபெறுகிறது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment