தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி விழா
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 21.04.2018 சனிக் கிழமை காலை
10.00 மணியளவில்
சித்திரை மாதம் திருவாதிர நக்ஷத்திரத்தில் ஸ்ரீ ராமானுஜரின் 1001 வது ஆண்டு ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு
ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவ குலதில் அவதரித்த
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீ நமோ நாராயணா மந்திரத்தை
மக்களிடம் உபதேசம் செய்தவர். இவர் ஒரு தத்துவ மேதை. சமூகப்புரட்சியாளர், மனிதாபிமானம்
மிக்க சமுதாயச் சிந்தனையாளர். சம்நோக்கும், சமூக நோகும் கொண்டவர். ராமானுஜர் தாம் ஒரு
வேதாந்தியாக மட்டும் வாழ்ந்திடாமல், சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகச் செயல்பட்டார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டு, அந்த கோயில் வழிபாட்டை
ஆழ்வார்கள் பாசுரத்தில் கூறியபடி, திருத்தி அமைத்து செயல்படுத்தினார். கோயில் பணியாளர்களில்
அனைத்து தரப்பு மக்கள், பெண்கள் ஆகிய அனைவரும் இறைத் தொண்டில் ஈடுபடும் நடைமுறையை ஏற்படுத்தினார்.
சமுதாய மக்களிடையே சமத்துவம் மலரசெய்வதும், எல்லாரும் ஒற்றுமையாக வாழச் செய்வதும் இவரின்
நோக்கமாகும். இப்படிபட்ட ஸ்ரீவைஷ்ணவ குருவின் அவதார திர்னத்தன்று நாம் அவரை வேண்டி
வணங்கி நலம் பெறுவோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment