தன்வந்திரி பீடத்தில்
அக்ஷய திரிதியில்
சிறப்பு யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆக்ஞைப்படி இன்று 18.04.2018 புதன்
கிழமை அக்ஷய திரிதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர்
மஹா யாகமும் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, “அக்ஷய திருதியை” எனப்படுகிறது. 'அக்ஷயம்' என்றால் வளர்வது என்று பொருள். அக்ஷய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அக்ஷய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஐந்து அடி உயர ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு ஹோமமும் அபிஷேகமும் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் 16 வகையான கலசங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்று நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள் கொண்டு அனைத்து மக்களும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற பிரார்த்தனை செய்து யாகத்தில் சேர்க்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் ஹோம பிரசாதம் வழங்கி அன்னதானமும் நடைபெற்றது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment