தன்வந்திரி பீடத்தில்சகல திருஷ்டி, தோஷம் நீங்கி சௌபாக்யம் தரும்ஸ்ரீ சரப சூலினி ப்ரிதயங்கிரா யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள,
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 15.04.2018 ஞாயிற்றுக்
கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில்,
பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி ஸ்ரீ சரப சூலினி ப்ரித்யங்கிரா யாகம் நடைபெற்றது.
ஜோதிட சாஸ்திர, வான
நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன்
ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த
தாய், தந்தையரை நினைத்து வழிபாடு
நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில்
நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக
ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.
திருஷ்டியினால் ஏற்படும் முன்னேற்றம் பாதித்தல்,
குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல்,
தாம்பத்திய உறவில் விரிசல்,
நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல்
உட்பட ஏராளமான பாதிப்புகள் விளகவும், நாக தோஷம்,
சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும்,
பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும்,
திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும்,
பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல
தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம்
அடையவும், மண் வளம், மழை
வளம் பெருகி இயற்கை வளம்
பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும்
இன்னல்கள் அகலவும் இந்த ஹோமத்தில் பிரார்த்தனை செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் ஹோம பிரசாதம் வழங்கி அன்னதானமும் நடைபெற்றது.
இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment