தன்வந்திரி பீடத்தில்
வருகிற 23.04.2018
திங்கட் கிழமையில்
வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து ஹோமம்.
வீடு கட்டுதல், வசிக்கும் வீடு மற்றும் வியாபாரத் தலங்களின்
அமைப்பு, நோக்கும் திசை, அறைகளின் நீளம், அகலம் என அனைத்திலும் வாஸ்து தோஷம் உள்ளதா
எனப் பார்ப்பது தற்போது அனைவரும் கடைப்பிடித்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. மனை
தொடர்பான அனைத்து நற்காரியங்களைத் தொடங்கும் முன் வாஸ்து தோஷம் பார்ப்பதும் தற்போதைய
நடைமுறையே. இவை அனைத்திற்கும் காரணமான வாஸ்து பகவான் பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார்.
அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அப்படி அவர் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில்
மனை, வீடு, பூமி சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்கலம் பெருகி
நன்மை கிடைக்கும்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 23.04.2018 திங்கட் கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு
காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை
செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு
சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.
காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள்,
சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து
தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக்
கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி
பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட
செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை
பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள்,
மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள்,
நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில்
ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா,
கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172
- 230033,
செல் - 9443330203
Bank
Details :
Name : Sri
Muralidhara Swamigal
Bank Name : State
Bank of India
Account Number :
10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
No comments:
Post a Comment