Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, April 10, 2018

74 Bhairavar Yagam with 64 Yogini Pooja

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
74 பைரவர் யாகத்துடன் 64 யோகினிகள் பூஜை..

பைரவருக்கு  74 குண்டங்களில் 74 சிவாச்சாரியர்கள் அமர்ந்து 74 பைரவர் ஹோமம் நடைபெற்ற மஹாபீடம் என்று அழைக்கப்படும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 08.04.2018 ஞாயிற்று கிழமை காலை முதல் மாலை வரை க்ருஷ்ண பக்ஷ தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா பைரவருக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும் மற்றும் 64 பைரவருக்கும் 64 குண்டத்தில் மஹா ஹோமம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ சக்ரத்தில் நித்யவாசம் செய்யும் பராம்பிகையைச் சுற்றி வீற்றிருக்கும் 64 யோகினிகளுக்கு சிறப்பு பூஜைகள் சென்னை சாக்த ஸ்ரீ பரணிகுமார் அவர்கள் நிகழ்த்தினார். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களான 1. ஸ்ரீ அசிதாங்க பைரவர், 2. ஸ்ரீ ருரு பைரவர், 3. ஸ்ரீ சண்ட பைரவர், 4. ஸ்ரீ குரோதன பைரவர், 5. ஸ்ரீ உன்மத்த பைரவர், 6. ஸ்ரீ கபால பைரவர், 7. ஸ்ரீ பீக்ஷன பைரவர், 8. ஸ்ரீ சம்ஹார பைரவர் மற்றும் மஹா பைரவருக்கும், 64 பைரவர் 64 யோகினிகள் பூஜை  கணபதிபூஜை, குரு மண்டல பூஜை, 64 பைரவர் சகித 64 யோகினிகள் மூல மந்திர அர்ச்சனை, கட்கமாலா, ஆஸ்ரேய அஷ்டோத்திரம், நவாவரண சக்ரேஸ்வரி த்யானம், லலிதா ஸஹஸ்ர நாமம் என தொடர்ந்து  64 விளக்குகள் ஏற்றி தீபாராதனையுடன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவருக்கும், அஷ்ட பைரவ சகித மஹா கால பைரவருக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ்வைபவத்தில் ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்கிற ஸ்ரீ கங்கோத்ரி ஸ்வாமிகள், சத்குரு மாதா அன்னபூரணி, அடிஅண்ணாமலை மாதா புவனேஸ்வரி, காஞ்சீபுரம் லளிதாம்பிகா பீடம் ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீ பாலானந்த ஸ்வாமிகள், அடயார் பாலாபீடம் ஸ்ரீ கணேசன் ஸ்வாமிகள், ஆத்ரேய கோத்திரம் பைரவ ரமணி, மற்றும் அம்பாள் உபாசகர் ஸ்ரீ சங்கரநாராயணன் சென்னை அவர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








No comments:

Post a Comment