தன்வந்திரி பீடத்தில் வாசவி ஜெயந்தி விழா
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் ஆரியவைசியர்களின் குலதெய்வமாக விளங்குகின்ற ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அவதார
தினத்தை முன்னிட்டு இன்று 25.04.2018 புதன் கிழமை
காலை 10.00 மணியளவில்
தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாசவி தேவிக்கு
நல்லெண்ணைய், சீக்காய் பவுடர், வாசனை பவுடர்,
மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர்,
கரும்பு சாறு, பன்னீர், பஞ்சாமிரதத்துடன்
மஹா அபிஷேகமும் ஸ்ரீ
வாசவி மூலமந்திர ஜப ஹோமமும், மங்கள
கௌரி ஹோமமும் நடைபெற்றது. இதில்
அனைத்து குடும்பங்களிலும் சுப காரியங்கள் நடைபெறவும்,
சகல சம்பத்துக்களும் பெற்று சௌபாக்கியத்துடன் வாழ
பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment