ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் முதன்முறையாக தங்கமான தேரோட்டம் நடைபெற்றது. இந்த தங்கமான தேரில் உற்சவர் தன்வந்திரி, தாயார் ஆரோக்ய லட்சுமி, சக்கரத்தாழ்வார், நவநீதகிருஷ்ணன் மற்றும் அகத்தியர் ஆகிய விக்ரகங்கள் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஒவ்வொரு சன்னதியிலிருந்தும் ஆரத்தி அளிக்கப்பட்டது. மேலும் வருகிற பௌர்ணமி வரை இந்த தங்கமான தேரோட்டம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த வைபவத்திலும் பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென்று பிரார்த்தித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment