ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்ரீ வள்ளலார் ஜெயந்தி விழா, 6.10.2013, ஞாயிறு
தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூரில் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் (புரட்டாசி) மாதம், சித்திரை நட்சத்திரத்தில் 5-ஆம் நாள் மாலை 5:30 மணிக்கு திருவருட்பிரகாச வள்ளலார் இராமையா பிள்ளை, சின்னம்மையார் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார். இராமையா பிள்ளை கிராமக் கணக்கராக வேலை பார்த்து வந்தார். சின்னம்மையார் பொன்னேரிக்கு அருகில் சின்னக்காவனத்தில் பிறந்து வளர்ந்தவர்.
இவர் ஒதாமல் உணர வல்லவரென்று உணர்ந்து கற்பிப்பதைக் கைவிட்டார். ராமலிங்கர் எவ்வாசிரியரிடத்தும் பயின்றதில்லை. இறைவினிடமே ஓதாது உணர்ந்தார்.
மக்களுக்காக வாழ்ந்த வள்ளற்பெருமான்
சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் நெறியை ஏற்படுத்தி அதைப் பரப்ப 1865-ல் பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவினார்.
கடவுளின் அருளை எவ்வாறு பெறக்கூடுமெனில் ஜீவகாருண்ணிய ஒழுக்கதினால் பெறக்கூடுமல்லாது வேறு எவ்வழியிலும் பெறக்ககூடாது. எந்த வகையிலும் ஆதாரமில்லாத எழைகளுக்கு உண்டாகின்ற பசி என்னும் ஆபத்தை நிவர்த்தி செய்வதே ஜீவகாருண்ணியத்தின் முக்கிய லட்சியம். அதன்படி 23.05.1867-ல் அற்றார் அழிபசி தீர்க்கும் வண்ணம் சத்திய தருமச் சாலையை ஏற்படுத்தினார். அன்று வள்ளற்பெருமான் காட்டிய வழியில் இன்றும் ஜீவகாருண்ணியத் தொண்டு நடந்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வள்ளல் பெருமானுக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் வள்ளலார் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினந்தோறும் பிரார்த்தனைகளும், அன்னதானங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 6.10.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிறப்பு கூட்டு பிரார்த்தனை, கோ பூஜை, யாகம் மற்றும் சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
No comments:
Post a Comment