சத்ரு தொல்லை நீங்க
சத்ரு சம்ஹார ஹோமம்…
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 8.11.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில்
மாபெரும் சத்ரு சம்ஹார ஹோமமும், த்ரிசதி அர்ச்சனையும் நடைபெற உள்ளது.
தன்வந்திரி
பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு கார்த்திகை பெண்களுடன் கார்த்திகை குமரனை ப்ரதிஷ்டை
செய்து அவ்வப்பொழுது சுப்ரமணிய ஹோமமும், சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெற்று வருகிறது.
கார்த்திகை பெண்கள் |
இந்த
ஆண்டு கந்த சஷ்டியை முன்னிட்டு உலக மக்கள் சத்ரு பயமின்றி செவ்வாய் கிரகங்களால் ஏற்படும்
தோஷங்கள் அகலவும், இரத்த புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கவும், தொழிலில்
ஏற்படும் தடைகள் நீங்கவும், பூமியினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், உடலில் ஏற்படும்
பலவிதமான நோய்கள் நீங்கவும், திருமணத் தடைகள், உத்யோக தடைகள், குழந்தையின்மை போன்றவைகள்
நீங்கவும், பெற்றோர்கள் இல்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல ஆரோக்யம் கிடைக்க தன்வந்திரி
பீடத்தில் மேற்கண்ட யாகம் விசேஷமாக நடைபெற உள்ளது.
இதனைத்
தொடர்ந்து கார்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், த்ரிசதி அர்ச்சனையும், விசேஷ ப்ரார்த்தனையும்
நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தொடர்புக்கு : 04172-230033
No comments:
Post a Comment