22.10.2013
செவ்வாய்கிழமை முதல் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு
சிகப்பு மிளகாய் அபிஷேகம்…
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பத்தாம் ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டும்
உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மாபெரும் ப்ரித்யிங்கிரா
தேவி ஹோமம் நடத்த உள்ளார். இந்த ஹோமத்தில் 5000 கிலோ காய்ந்த மிளகாய் வற்றல், 1008
பூசணிக்காய், 108 வகையான மூலிகைகள், 108 வகையான பட்டு வஸ்த்திரங்கள், சௌபாக்ய பொருட்கள்,
108 முறம், உப்பு, கடுகு, மிளகு, உளுந்து வடை, நவரத்தினங்கள், மாங்கல்ய பொருட்கள் மற்றும்
அனைத்துவிதமான பட்சணங்களும் இந்த ஹோமத்தில் சேர்க்கப்பட உள்ளது.
இந்த
ஹோமத்தில் மிளகாய் வற்றல் அதிகம் இடம்பெறுவதற்கான காரணம் உலக மக்களின் செய்வினை, பில்லி,
சூன்யம், சுமங்கலி சாபம், கன்னி சாபம், குரு சாபம், பிராமன சாபம், ஊழ்வினை, மாந்த்ரிகம்,
தாந்த்ரிகம், காத்து, கருப்பு, சமராகு, ராகுதசை, ராகுபுக்தி, சனிதசை, சனிபுக்தி, அஷ்டம
சனி, ஏழரை சனி, ஜென்ம சனி போன்றவைகளால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மேலும் பல தோஷங்கள்
நீங்கவும், திருமணம், குழந்தை, தொழில், உத்யோகம், வியாபாரம், வழக்கு, கணவன் மனைவி ஒற்றுமை
மற்றும் இராஜாங்க பதவி கிடைக்க நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்
20.12.2013
வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் வாஞ்சாகல்பலதா கணபதி ஹோமம். மாலை 6.00 மணியளவில்
தீபசண்டி பாராயணம்.
21.12.2013 முதல்
25.12.2013 வரை
நடத்தப்படும் ஹோமங்கள்
- ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம்– 21.12.2013
- சூலினி ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் திருஷ்டி துர்கா ஹோமம் – 22.12.2013
- ராஜ ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் வாராகி ஹோமம் – 23.12.2013
- மங்கள ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் நிகும்பல ஹோமம் – 24.12.2013
- மஹா ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் மஹா பைரவர் ஹோமம் – 25.12.2013
இந்த
ஹோமத்தில் 16க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
சுமார் 5000 கிலோ மிளகாயுடன், 2000 லிட்டர் வேப்ப எண்ணெய் கொண்டு நடைபெறும் இந்த ஹோமங்களை
முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு
22.10.2013 செவ்வாய்கிழமை முதல் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை முன்வைத்து,
தங்களின் கரங்களினாலேயே சிகப்பு மிளகாய் வற்றல் அபிஷேகம் நடைபெற உள்ளது. இப்படி பக்தர்களின்
பிரார்த்தனைகள் நிறைவேறும் வகையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறக்கூடிய இந்த ஹோமங்களில்
பக்தர்கள் கைகளினால் அபிஷேகம் செய்யப்பட்ட மிளகாய் வற்றலை சமர்பிக்கப்பட உள்ளது.
மேலும்
இந்த ஐந்து நாட்களும் சிறப்பு அன்னதானங்களும் நடைபெற உள்ளது. இந்த ஐந்து நாள் வைபவங்களிலும்
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் பிரார்த்திக்கின்றோம்.
குறிப்பு
: 5000 கிலோ மிளகாய் வற்றல் ஹோமத்திற்கு கைங்கர்யமாக மிளகாய்வற்றல் வாங்கிக்கொடுக்க
விரும்புபவர்களும், இந்த ஹோமத்தில் குடும்பத்தினருடுன் பங்குபெற விரும்புபவர்களும்
கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.
(குடும்பத்துடன்
பங்குபெற ரூ.2000/-. (4 நபர்கள் மட்டும்))
மேலும்
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை
மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033
/ 09443330203
www.dhanvantripeedam.com / www.danvantripeedam.blogspot.in
Email
: danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment