உலக
நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி முதல் 25ஆம்
தேதி வரை 5000
கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்திற்காக 12 அடி ஆழமும், 16 அடி விட்டமும் கொண்ட மாபெரும் யாகசாலை அமைப்பதற்கான
ஆயத்த திருப்பணிகள் நடைபெற்று
வருகிறது. இந்த திருப்பணிகளை சிவாச்சாரியார்கள் பார்வையிட்டனர்.
மேலும்
அன்றைய தினங்களில் வரும் பக்தர்கள் எந்தவித சிரமும் இல்லாமல் ஹோமத்தில் கலந்துகொள்வதற்காக
வசதிகளை செய்து வருகிறார் ஸ்வாமிகள்.
No comments:
Post a Comment