திருமணம்
ஆகாத ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், பித்ரு சாபங்களும், கிரக தோஷங்களும்,
குலதெய்வ தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை கந்தர்வராஜ ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தின்
பொழுது ஸ்வாமிகள் ஹோமத்தின் சிறப்புகள் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் பக்தர்களுக்கு
அருளுரை வழங்கி ஆசீர்வதித்தார்.
இந்த
ஹோமத்தில் 100க்கும் மேற்பட்ட திருமணமாகாத ஆண்கள் தமிழகம் மற்றும் அனைத்து மாநிலங்களில்
இருந்தும் வந்திருந்து கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு
ஹோம கலச தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும்
அன்றையதினம் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிலும், சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment