ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், திருமணம் ஆகாத
பெண்களுக்கான ஹோமம் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சிறப்பு கந்தர்வராஜ ஹோமமானது
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் நடைபெற்று வருகின்றன.
அந்த
வகையில் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சுயம்வரகலா
பார்வதி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் திருமணமாகத பெண்கள் தமிழ்நாடு மற்றும் பிற
மாநிலங்களில் இருந்தும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் வருகிற டிசம்பர் மாதம் 20த் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற இருக்கிற 5000 கிலோ சிகப்பு மிளகாய் ஹோமத்திறகாக தற்போது பீடத்தில்
அமைந்துள்ள உக்ர ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் அபிஷேம் நடைபெற்று வருகிறது. இதில்
சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பெண்கள், தேவிக்கு மிளகாய் அபிஷேம்
செய்து ப்ரார்த்தனை செய்து கொண்டனர்.
பின்னர்
பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment