அகத்தியர் ப்ரதிஷ்டை விழா சிறப்பாக
நடைபெற்றது..
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 18.10.2013
வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிவரை
உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் நாகாபரணத்தில் நின்ற கோலத்தில், கமண்டலம், ஓலைச்சுவடி, யோக தண்டம் போன்றவைகளுடன் ஆதார பீடத்தில் நமச்சிவாய மந்திரத்துடன் செதுக்கிய அகத்தியர்
விக்ரஹமானது இரண்டடி உயரத்தில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூடம் திரு. லோகநாத ஸ்தபதி அவர்களின் திருக்கரங்களால் வடிவமைக்கப்பட்ட கல் விக்ரஹம் சென்னை கேளம்பாக்கம் சித்த யோகி தவத்திரு சிவசங்கர் பாபா அவர்களுடைய தலைமையில், விசேஷமான முறையில் அகத்தியருக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யோக மண்டபத்தில், சிவலிங்க
ரூபமான 468 சித்தர்கள் மற்றும் எண்ணற்ற குருமார்கள் உள்ள பீடத்தில் மேலும் அருள் சேர்க்கும் விதத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் பிரதிஷ்டை நடைபெற்றது.
இந்த வைபவத்தின்போது
பக்தர்கள் கைப்பட எழுதிய தன்வந்திரி மஹாமந்திர லிகிதஜப பிரதிஷ்டையும் நடைபெற்றது.
அகத்தியர்
ப்ரதிஷ்டை விழாவின்போது ஆன்மிக
எழுத்தாளரும், பேச்சாளருமான திரு.சுவாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டு ஆன்மிக
சிறப்புரையாற்றினார்.
மேலும் சாதுக்கள், சன்னியாசிகள், மஹா புருஷர்கள், தவ சீலர்கள், சிவனடியார்கள், சித்த மருத்துவர்கள் போன்ற பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பீடத்திற்கு வருகை தந்த
பக்தர்களும் அகத்தியர் ப்ரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டு கூட்பிரார்த்தனை
செய்தனர்.
பின்னர்
பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த
வைபவங்களை ஸ்வஸ்திக் டிவி (இணையதள டிவி) நிறுவனத்தினர் இணையதளத்தில் நேரடி
ஒளிபரப்பு செய்தனர்.
website :
www.swasthiktv.com
No comments:
Post a Comment