வாலாஜாபேட்ட்டி ஸ்ரீ தன்வந்திரி
பீட்த்தில்
வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாஸ்து
ஹோமங்கள்
வாஸ்து நாளில் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞனகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளித ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
வருகிற 04.06.2018 திங்கட்க் கிழமை காலை 10.00
மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக
பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது. மேலும் இதில் பஞ்ச பூதங்களுக்கும், அஷ்ட்திக்பாலகர்களுக்கும்,
வாஸ்து பகவானுக்கும் மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது.
வாஸ்து
பகவான்:
பரமேஸ்வரனுக்கு அந்தகன் எனும் அசுரனுக்கும் போர்
நடந்தது. அந்த
சமயம் ஈசன் மிகவும்
கோபத்துடன் சண்டையிடும் வேளையில் அவர் உடலில் இருந்து விழுந்த வியர்வை துளி
பூமியில் பெரிய மனித உருவம் கொண்ட உடலாக தோன்றியது எனவும் அவனுக்கு தாங்க முடியாத பசி ஏற்ப்படதாகவும், அவன் தேவர், மனிதர், அசுரர் என அனைவரையும் மேலும் பூமியில்
உள்ள அனைத்தையும் பிடித்து உண்ண ஆரம்பித்தான். உடனே அனைவரும் சிவனிடம் சென்று
முறையிட்டனர்.
ஈசன்
அனைவரின் விருப்பபடி அந்த மனித உருவத்தை பூமியின் மேல் குப்புற தள்ளி மண்ணை
பார்த்து அந்த மனித உருவம் படுத்திருகுமாறு தூங்க வைத்து அவன் மீது 45 தேவதைகளையும் காவலுக்கு வைத்து வருடத்தின்
நான்கு பருவகாலத்திலும் ஒரு பருவத்திற்கு மூன்று முறை (மாதத்திற்கு ஒரு முறை )
விழிக்கும் போது வீடு,மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு மனை பூஜை செய்வதின் மூலம் அதை
கட்டுபவர்கள் தரும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பசியை போக்கி கொள்ளும் படி ஈசன்
பணித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வாஸம் செய்ய இடம் தருவதால் அவனை வாஸ்து
புருஷன் (மனையின் தலைவன் )என்று பிரம்மாவால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
வாஸ்து
கோவில்:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில்
சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம்
அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்
பட்டுள்ளது.
வாஸ்து பக்வானும் வாஸ்து சாந்தி ஹோமமும்:
வாஸ்து
சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள்
அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற
இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக்
கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும்
என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
வாஸ்துவும் வாஸ்து
தோஷமும்:
ஒரு
வீடோ, அல்லது அடுக்குமாடி குடியிருப்போ
அல்லது அலுவலகமோ இந்த வழிகாட்டுதல்களில் எதையாவது மீறினால், அதற்கு வாஸ்து தோஷம் என்று பெயர்.
வாஸ்து என்பது
பஞ்சபூதங்களையும், அஷ்ட திக்குகளையும், ஐந்து தனிமங்களையும் கொண்டு உள்ளடங்கியது. அறிவியலின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டது. வாஸ்து என்பது எதை அடிப்படையாக கொண்டது என ஆராய்ந்தால் காந்த
அலைகளின் அடிப்படையே என்பதுதான் உண்மை. அது போல் இந்த காந்த ஓட்டத்தில் தடை
வரும்போது நாம் செய்யும் செயலில் தடை, உடல்நலம்
பாதிப்பு பொருள் வரவு தடை போன்றவைகள் வருகின்றன. அறிவியல், ஆன்மிகம், ஜோதிடம் போன்றவைகளில் வாஸ்து முக்கிய பங்கு
வகிக்கிறது. ஒரு வீடோ, நிலமோ, கட்டிடங்களோ விஞ்ஞானத்தை முன்னிலைப்படுத்தி இறையருளுடன், குருவின் ஆசியுடன், நவக்கிரகங்களின் தன்மைக்கேற்றவாறு
வாஸ்து சாஸ்த்திரத்தை முன்னிலைப்படுத்தி ஜோதிடர்களின் ஆலோசனை பிரகாரம் வீடு,
மனை, தொழிற்சாலை போன்ற பல்வேறு நிறுவனங்கள் அமைத்துகொள்வது
மிகவும் சிறப்பாகும். ஆனால் இன்று அவசர உலகத்தில் யாருடைய ஆலோசனையும்
பெறாமல், தன்னிச்சையாக செயல்பட்டு பல நிலங்களையும், மனைகளையும், வீடுகளையும் வாங்கி அவை விற்க முடியாமலும்,
அவற்றில் வசிக்க முடியாமலும், பண கஷ்டமும்,
மன கஷ்டமும் அடைந்து உறவினர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பிரச்சனைகளை
விலைக்கு வாங்கி வருகிறார்கள். இதனால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய தோஷங்களை போக்கவும்,
அவற்றில் இருந்து வெளி வரவும், இழந்த பொருட்களை
மீண்டும் பெறவும் பதற்றம் இல்லாத சுதந்திரமான வாழ்க்கை வாழவும், வாஸ்து ஹோமம் உதவி செய்யும். மேலும் அன்பு, அமைதி மற்றும் குடும்பத்தில்
ஒருவருக்கொருவருக்குள் ஏற்படும் இணக்கம் ஆகியவற்றை வாஸ்து தோஷ
நிவர்த்தி ஹோமத்தின் மூலம் அதிகரிக்க செய்யலாம். இந்த
யாகத்திலும் பூஜையிலும் கலந்துகொண்டு பக்தர்கள் பயன்பெற வேண்டுகிறோம்.
இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள்,
மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள்,
பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
No comments:
Post a Comment