தன்வந்திரி பீடத்தில்
காளி யாகத்துடன் காலபைரவர் ஹோமம் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
08.05.2018 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
உலக நலன் கருதி காளி யாகத்துடன் காலபைரவர்
யாகம் நடைபெற்றது.
காளி
காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும்
அதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம்
இவளே. இவற்றை
போக்குவதும், நீக்குவதும்
இவளே. காளி
நேர்மையின் வடிவம். நாம்
நேர்மையாக இருந்தால் காளியை வைத்து யாரும் எவ்வித துன்பங்களையும் நமக்கு செய்ய இயலாது. மாறாக யார் துன்பம் செய்ய நினைத்தார்களோ
அவர்கள் வாழ்வு படிப்படியாக அழிவது நிச்சயம் என்கிறது புராணங்கள்.
காளி அன்னையின் வடிவம். தீமைகளை அழிப்பவள். வெற்றிகளை அளிப்பவள். காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் ஆவாள். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியையும் அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமிலா பெருவாழ்வு தருபவள். மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும், அசூரர்களுக்கும் அருள்பாலித்தவள் இவளே. சிவபெருமானின் உயரிய வடிவமான சரபேஸ்வரருக்கும் சக்தி அளித்தவள் இவளே. இவளை வழிபடுவதில் பல முறைகள் உண்டு. மனதில் நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காப்பவள் இந்த காளி. காளியின் அருள் பெற்றவர்களே இதற்கு சாட்சியாகும். இன்றைய உலக மக்கள்
தேவையற்ற ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள பலவிதமான குறுக்கு வழிகளிலும், தீய செயல்களிலும் ஈடுபட்டு அதை நிவர்த்தி செய்ய அனுபவம் இல்லாத நபர்களின் வழிகாட்டுதல்களால்
பல்வேறு மக்களுக்கு தீங்கிளைக்கும் வகையில் செயல்பட்டு செய்வினை, பில்லி, சூன்யம், மற்றும் மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற விபரீதமான பூஜைகளில் பங்கேற்று பயத்திற்கு ஆளாகி வாழ்வில் அனைத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். அறியாமையினாலும், தவறான வழிகாட்டுதல்களினாலும், நரபலி வரை சென்றுவிடுகின்றனர்.
இத்தகைய நோய்களில் இருந்து விடுபடவும், நல்வழிப்படுத்தவும் சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு உலக மக்களின் நலனுக்காக இந்த ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் காளிக்கே உரிய செவ்வரளி பூ, தாமரை பூ, நாயுருவி, வெண்கடுகு, கடுகு, மிளகு போன்ற விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது. மேலும் பூசணிக்காய், மாதுளம் பழம், இலுப்பை எண்ணெய், முந்திரி, பேரீச்சை போன்ற பல்வேறு காய்கறிகள், பழங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் ஹோமத்தில் சேர்க்கப்பட்டது. மேலும் துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபார மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடூ, வாசல், நன்மக்கள் அமையவும் இந்த மாபெரும் மகா காளி யாகத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
வருகை புரிந்த பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட் பிரசாதம் வழங்கி
ஆசிர்வதிதார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment