தன்வந்திரி பீடத்தில்
மழை வேண்டியும்
இயற்கை வளம் பெறவும்
சப்த கன்னியர் பூஜையுடன் வருண
ஜப ஹோமம்
நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு 19.05.2018 சனிக்கிழமை குற்றாலம் அகஸ்த்தியர் ஆசிரமம் நிறுவனர் மற்றும்
ஜீவநாடி வாசகர் திரு. முத்துகுமார ஸ்வாமி அவர்கள் முன்னிலையில், அக்னி நக்ஷத்திரத்தின்
உஷ்ணாதிக்கம் குறையவும் தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கவும், பருவமழை
பொழிந்து விவசாயம் செழிக்கவும், நீர் நிலை ஆதாரங்கள் வற்றாமல் இருக்கவும், அனைத்து
நதிகள் மற்றும் ஆறுகளில் நீர் பெருக்கடுத்து ஓடவும், மண் வளம்
மழை வளத்துடன் இயற்கை வளம் பெறவும், விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி அடையவும், கிராம தேவதையை
போற்றி ஆராதிக்கும் வகையில் தன்வந்திரி பீடத்தில் சப்தமாதாக்கள் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் பூஜையுடன், வருண ஜப
ஹோமமும் நடைபெற்றது..
வருண பகவான் யார் :
இந்த உலகத்தின் அரசனாக வருண பகவான் இருந்து வருகிறார். உலகத்தின்
உயரத்தில் இருந்து வசித்துவரும் அவர் நமக்கு அவ்வப்பொழுது மழையை பொழிந்து அருள் புரியுகிறார். இவர் எல்லையற்ற
அறிவையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறர். ஆயிரம் கண்களை கொண்டு உலகத்தை கண்காணித்து
காத்து வருகிறார். ஒழுக்கநெறியின் கடவுளும் இவரே எனலாம். ரிக்வேதத்தில்
வருண பகவான் முக்கியமான தெய்வங்களில் ஒருவர், இந்த தெய்வத்தின் கண் இமைகளில் இருந்து மழைப் பெய்வதாகவும் கடல்,
நீர்நிலைகள் மற்றும் மழைக்கு பொறுப்பான கடவுளே வருணன் என்ற
நம்பிக்கை இந்துக்களிடம் நிலவுகிறது. வருண பகவானின் மகன் தமிழ் முனிவரான அகஸ்தியர்
என்பதால், வருணன்
தமிழுக்கும் மிகவும் நெருக்கமானவர் எனலாம். தொல்காப்பியத்திலும் வருண பகவான் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தெய்வத்தின் கண் இமைகளில் இருந்து மழைப் பெய்வதாகவும்
கூறப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வருண பகவானை வேண்டி தன்வந்திரி பீடத்தில்
மழை வேண்டியும் பருவமழை தவராமல் பெய்யவும், அக்னி நக்ஷத்திரத்தின்
தாக்கம் குறயவும், விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்கவும், குடிநீர்
தட்டுப்பாடு வராமல் இருக்கவும், நீர் நிலை ஆதாரங்கள் பெறுகவும், இயற்கை வளம்
பெறவும் சப்த கன்னியர் பூஜையுடன் வருண ஜப ஹோமம் நடைபெற்றது. இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment