Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, May 26, 2018

Sakthi Peeda Yagam - Srividhya Homam


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
முனீஸ்வரர் பூஜையுடன் நவீன கோசாலை திறப்பு விழா, நவாவரண பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், தனாகர்ஷண யக்ஞம்,
51 யாக குண்டங்களில் 51 சக்திபீட யாகம், சீதா கல்யாணம்,
108 லக்ஷ்மி பூஜையுடன் சிறப்பு வைபவங்கள் துவங்கியது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்ப்டி, தன்வந்திரி பீடத்தில் இன்று 26.05.2018 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் 1.30 மணி வரை கோபூஜை, கலச பூஜை, யாகசாலை பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நக்ஷத்திர ஹோமம், நவாவரண பூஜையும் மாலை 4.00 மணியளவில் ஸ்ரீவித்யா ஹோமமும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நாளை 27.05.2018 ஞாயிறுக் கிழமை காலை 8.00 மணி முதல் ஸ்ரீ பால் முனீஸ்வர்ருக்கு பொங்கல் வைத்து மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜையும், 09.00 மணிக்கு நவீன கோசாலை திறப்பு விழாவும், 10.00 மணிக்கு தனாகர்ஷண யக்ஞத்துடன்,  பாண்டிச்சேரி பக்தர்கள் பங்கேற்கும் 51 யாக குண்டங்களில் 51 பெண்கள் பங்கேற்று நடைபெறும் 51 சக்தி பீட யாகமும், ஸ்ரீ ஆரோக்யல்க்ஷ்மி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ பிரித்யங்கிரா தேவி, மாமேரு மற்றும் குபேர லக்ஷ்மிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், மாலை 3.30 மணி முதல் 5.00 மணி வரை காஞ்சி மடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீசந்த் முரளிதாஸ் பாகவதர், பொழிச்சலூர், சென்னை அவர்கள் நிகழ்த்தும் சீதா கல்யாண வைபவமும், மாலை 6.00 மணிக்கு 108 பெண்கள் பங்கேற்கும் 108 லக்ஷ்மி பூஜையும் நடைபெற உள்ளது. இதில் காஞ்சிபுரம் ஸ்ரீதேவி லலிதாம்பிகா பீடம்,  ஸ்ரீமாதா பாலானந்த ஸ்வாமிகள், கொடுமுடி ஆட்சி பீடம் மாதாஜி ராணியம்மாள் மற்றும் கோவை ராஜராஜேஸ்வரி பீடம் ஸ்வாமிகள் வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





No comments:

Post a Comment