ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
முனீஸ்வரர்
பூஜையுடன் நவீன கோசாலை திறப்பு விழா,
நவாவரண பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், தனாகர்ஷண யக்ஞம்,
51 யாக
குண்டங்களில் 51 சக்திபீட யாகம், சீதா கல்யாணம்,
108 லக்ஷ்மி பூஜையுடன் சிறப்பு வைபவங்கள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தின், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைப்ப்டி, தன்வந்திரி பீடத்தில் 26.05.2018 சனிக்கிழமை காலை
7.00 மணி முதல் இன்று 27.05.2018 ஞாயிறுக் கிழமை
மணி வரை கோபூஜை, கலச பூஜை, யாகசாலை பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நக்ஷத்திர ஹோமம், நவாவரண பூஜையும் ஸ்ரீவித்யா ஹோமம், ஸ்ரீ பால் முனீஸ்வர்ருக்கு பொங்கல் வைத்து மஹா அபிஷேகம், சிறப்பு பூஜை, நவீன கோசாலை திறப்பு விழா, தனாகர்ஷண
யக்ஞத்துடன், பாண்டிச்சேரி பக்தர்கள் பங்கேற்கும் 51 யாக குண்டங்களில் 51 பெண்கள் பங்கேற்று 51 சக்தி பீட யாகம், ஸ்ரீ ஆரோக்யல்க்ஷ்மி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ
பிரித்யங்கிரா தேவி, மாமேரு மற்றும் குபேர லக்ஷ்மிக்கு
சிறப்பு அபிஷேகங்கள்,
பூஜைகள்,
காஞ்சி மடம் ஆஸ்தான வித்வான்
ஸ்ரீசந்த் முரளிதாஸ் பாகவதர்,
பொழிச்சலூர், சென்னை அவர்கள் நிகழ்த்திய சீதா கல்யாண வைபவம், 108 பெண்கள் பங்கேற்ற 108 லக்ஷ்மி பூஜை
நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் ஸ்ரீதேவி லலிதாம்பிகா பீடம், ஸ்ரீமாதா பாலானந்த ஸ்வாமிகள், கொடுமுடி
ஆட்சி பீடம் மாதாஜி ராணியம்மாள் மற்றும் கோவை ராஜராஜேஸ்வரி பீடம் ஸ்வாமிகள் வருகை புரிந்து சிறப்பித்தனர். இரண்டு
நாட்களில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்வாமிகள் அருட் பிரசாதத்துடன்
அருளாசி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பாண்டிச்சேரி தன்வந்திரி குடும்பத்தினர் செய்தனர்.
இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment