தன்வந்திரி பீடத்தில்
பௌர்ணமி சிறப்பு யாகங்கள்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைப்படி வருகிற 29.05.2018 செவ்வாய்க் கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை
10.00 மணியளவில் ஆண்கள் திருமணத் தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத் தடை
நீக்கும் சுயம்வர கலாபார்வதி யாகம், தம்பதிகள்
குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம்
ஆகிய மூன்று யாகங்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
சந்தான கோபால யாகம் :
குழந்தை பாக்யம் இல்லாத
தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க
வேண்டி சந்தான கோபால யாகம்
நடைபெற உள்ளது.
இந்த யாகம் செய்வதின்
மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை
பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.
தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும்.
நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
கந்தர்வ ராஜ ஹோமம் :
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல
தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம்
நடைபெற கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற
உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு
ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும்,
கிரக ரீதியாக உள்ள தோஷங்களும்,
நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர்
சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம்
நடக்க வழிவகை செய்கிறது. இதில்
பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.
சுயம்வர கலா பார்வதி ஹோமம் :
இந்த சுயம்வரகலா பார்வதி
ஹோமம் செய்வதின் மூலம் எல்லாவிதமான திருமணத்
தடைகளும் நீங்கி உடனே திருமணம்
செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள்.
மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும்
அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும். இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு
கலசாபிஷேகம் நடைபெறும்.
மேற்கண்ட யாகங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு
ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வத்தித்து
பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள்,
மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள்,
நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில்
ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை -
632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
No comments:
Post a Comment