வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ரியல்
எஸ்டேட் பிரச்சினைகளுக்கும், கடன்களுக்கும் தீர்வுகாணும் பொருட்டும், கிரகங்களின் அனுகூலமற்ற நிலைப்பாட்டை
மாற்றியமைக்கவும்
ஸ்கந்த ஹோமம் நடைபெறுகிறது
ஓம் கார்த்திகேயாய வித்மஹே: ஷக்தி ஹஸ்தாய தீமஹி:
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதியும், ரியல் எஸ்டேட்
பிரச்சினைகளுக்கும், கடன்களுக்கும்
தீர்வுகாணவும், கிரகங்களின் அனுகூலமற்ற நிலைப்பாட்டை
மாற்றவும், மந்தநிலை, பயம், ஆன்மபயம் நீங்கவும் வருகிற 20.05.2017 ஞாயிற்றுக் கிழமை ஷஷ்டி
திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சத்ரு சம்ஹார
ஹோமம் நடைபெறுகிறது.
ஸ்கந்த ஹோமம் என்கிற சத்ரு
சம்ஹார ஹோமம்:
ஸ்ரீ முருக வழிபாடு
தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. ஸ்ரீ முருகருக்குரிய ஹோமங்களில் சத்ரு சம்ஹார ஹோமம் கைமேல் பலன் தரக்கூடியது. இந்த ஹோமத்தின்
மூலம் தீயவற்றிலிருந்தும், எதிரிகளின்
தொல்லையிலிருந்தும், நாம் பாதுகாப்பு பெறலாம், நம் முன்னோர்கள் மற்றும் கிரகங்களின் சாபங்களிலிருந்து
நம்மை விடுவித்து தீயகர்ம வினை நீங்கி குடும்ப வாரிசுகள், குடும்ப நல்லுறவு, கடன்களிலிருந்து
விடுதலை பெற்று நலம் பெறலாம்.
எதிரிகள் தொல்லை, அரசியலில் தொல்லை, வியாபாரத்தில்
போட்டியாளர்களிடமிருந்து ஏற்படும் தொல்லை நீங்க இந்த ஹோமத்தில் பங்கேற்பதின்
மூலம் பலன் பெறலாம். மேலும் சூனியம், திருஷ்டியால் கஷ்டப்படுகிறவர்கள், நாள்பட்ட நோயால்
பாதிக்கப்பட்டவர்கள், எதிர்மறை சக்திகளின் தொல்லை, கிரகங்களின் அனுகூலமற்ற நிலைப்பாடு, போன்றவைகள் நீங்கி சந்ததி வளரவும் குடும்ப உறவுகள் மேம்படவும் மந்தம் மற்றும் பயம் நீங்கி மேற்கண்ட ஹோமம் மிகவும் பயன் உள்ளதாகும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள்.
தடைகளை நீக்கி உங்கள் விருப்பங்கள் நிறைவேறவும், எதிரிகளை அழித்து
வெற்றி காணவும், ரியல் எஸ்டேட் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும் நீங்கள் உங்கள் லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் நன்மை தரும் மாற்றங்களைக் காணவும்,
முருகனின் அற்புதமான சக்திகளின் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தில்
வியத்தகு மாற்றத்தை உணரவும், இந்த ஹோமம் வழிவகை செய்யும்.
மேற்கண்ட ஹோமத்தில் பலவகையான மூலிகைகள், வாசனாதி திரவியங்கள், புஷ்பங்கள் மற்றும் நெய்,
தேன் சேற்க்கப்பட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையுடன் மஹா பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.
இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள்,
நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன்
கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
: ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513, வேலூர் மாவட்டம். தொலைபேசி
: 04172 - 230033, செல் – 9443330203. Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in
Bank
Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
No comments:
Post a Comment