வாலாஜாபேட்டை,
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
26.05.2018
சனிக்கிழமை
நவாவரண
பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம்,
27.05.2018
ஞாயிற்று கிழமை
தனாகர்ஷண
யக்ஞம், 51 யாக குண்டங்களில் 51 சக்திபீட யாகம்,
சீதா
கல்யாணம், 108 லக்ஷ்மி பூஜையுடன் சிறப்பு வைபவங்கள் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தின், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தன்வந்திரி பீடத்தில் வருகிற 26.05.2018 சனிக்கிழமை
காலை 7.00 மணி முதல் 1.30 மணி வரை கோபூஜை, கலச பூஜை, யாகசாலை பூஜை,
மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நக்ஷத்திர ஹோமம், நவாவரண பூஜையும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை ஸ்ரீவித்யா ஹோமமும் திவ்ய நாம பஜனையும்,
27.05.2018 ஞாயிறுக் கிழமை காலை 8.00 மணி முதல் பாண்டிச்சேரி
தன்வந்திரி குடும்பத்தினர் பங்கேற்கும் தனாகர்ஷண யக்ஞத்துடன், 51 யாக குண்டங்களில் 51 பெண்கள் பங்கேற்று நடைபெறும் 51 சக்தி பீட யாகம், 108 பெண்கள் பங்கேற்று நடைபெறும் 108 லக்ஷ்மி பூஜை, ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி,
ஸ்ரீ பிரித்யங்கிரா தேவி, மாமேரு மற்றும் குபேர லக்ஷ்மிக்கு சிறப்பு அபிஷேகங்களும்,
பூஜைகளும் பாண்டிச்சேரி பக்தர்கள் கைங்கர்யத்தால் நடைபெற உள்ளது. மேற்கண்ட நாட்களில்
நடைபெறும் யாக வேள்வியை காஞ்சிபுரம் ஸ்ரீதேவி லலிதாம்பிகா பீடம், ஸ்ரீ பாலானந்த ஸ்வாமிகள்
பங்கேற்று நிகழ்த்த உள்ளார். இதனை தொடர்ந்து மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை காஞ்சி மடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீ சந்த் முரளிதாஸ் பாகவதர், பொழிச்சலுர், சென்னை
அவர்கள் நிகழ்த்தும் சீதாகல்யாண வைபவமும்
நடைபெறுகிறது.
நவாவரண
பூஜை என்பது ஒரு மிகச்
சிறந்த பூஜையாகும். பூஜை செய்யக்கூடிய
சாதகர், தகுந்த குரு மூலம்
ஸ்ரீவித்யா மந்திர உபதேசங்கள் பெற்று, சாதகம்
செய்யவேண்டும். மேலும் அவரிடமிருந்து ஸ்ரீ பஞ்சதசாக்ஷரி
/ மஹா ஷோடசி மந்திரங்கள் உபதேசம்
பெற்று, இந்த நவாவர்ண பூஜை
செய்ய பீடாதிகாரம் பெற்றவர்கள் இந்தப் பூஜையை செய்வது மிகவும் சிறப்பு. பூஜை செய்பவர், தான் ஒரு ஜீவன் என்ற பாவமற்று தானே சிவம்
என்ற பாவனையுடன் அம்பிகையை பூஜிப்பதேயாகும். தன் ஹ்ருதயத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையை ஸ்ரீசக்ரத்தில்
அல்லது மேருவில் ஆவாஹனம் செய்து, பூஜைகள்
செய்து, முடிவில் தேவியை மீண்டும்
தன் ஹ்ருதயத்திலேயே அமரச் செய்கிறபடியால், சாதகன்,
தன்னைத்தானேப் பூஜை செய்து கொள்ளும்
நிலை ஏற்படும்பொழுது ஒரு உயர்ந்த நிலையை அடைகிறார். இதுவே இந்த பூஜையின் விசேஷம்.
பூஜை
மற்றும் ஹோமத்தின் பலன்கள் :
இப்பூஜை செய்பவருக்கும், ஏற்பாடு
செய்தவருக்கும், மற்றும் அதை காண்பதற்கும், பங்கேற்பதற்கும்,
கைங்கர்யம் செய்வதற்கும் அம்பிகையின் அருள்
இருந்தால் மட்டுமே அது நடக்கும்.
இப்பூஜையில் பங்கேற்பவர்களுக்கு 51 சக்திபீட தேவியின் அருள் கிடைத்து வாழ்வில்
எல்லா நலங்களுடன் சீரும் சிறப்புடன், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற்று ஆனந்த வாழ்வு
வாழ்வர்.
திருமணத் தடைகள் விலகும், குழந்தைப்
பேறு தடைகள் நீங்கும், நல்ல வேலை
கிடைக்கும், சீறான தொழில் அமையும்,
நோய்கள் தீரும், வாழ்வின் பலவிதமான தொல்லைகள் நீங்கும், குழந்தைகள் கல்வி, கேள்வியில்
சிறந்து விளங்குவர், நாடு நலம் செழிக்கும், மேலும் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குவர், சௌபாக்யங்கள் கிடைத்து சிறப்புடன் வாழ்வர், போன்ற
பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
இந்த
யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள்,
மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள்,
நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில்
ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513,
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 –
230033, செல் – 9443330203.
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
No comments:
Post a Comment