Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, May 15, 2018

Nava Durga Yagam - Amavasi Yagam.....


ஸ்ரீ  தன்வந்திரி  பீடத்தில்
அமாவாசை யாகத்துடன் நவதுர்கா  ஹோமம் நடைபெற்றது...

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 15.05.2018 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை வரை அமாவாசையை முன்னிட்டு நவதுர்கா ஹோமம், ஸ்ரீ ஐஸ்வர்ய பிரித்யங்கிரா தேவி ஹோமம், மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
சமஸ்கிருதத்தில் 'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன.
சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.

இந்த யாகத்தில் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள் அகலவும்,  மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த யாகங்களில் சிறப்பு திரவியங்கள் சேர்க்கப்ட்ட்து.

மேற்கண்ட யாகங்களில் பங்கேற்பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து அருட்பிரசாதம் வழங்கினார். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்ட்து. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment