தன்வந்திரி பீடத்தில்
வளமான வாழ்வு தரும் வராஹி ஹோமம்
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைப்படி வருகிற 08.07.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் உலக நலன் கருதியும் வராஹி ஹோமம் நடைபெறுகிறது.
ஸ்ரீ வராகி
அம்மன்:
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள்.
தன்வந்திரி பீடத்தில் விவசாய பெருமக்களின்
நலன் கருதியும், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தோடவும், மக்கள் வளமையையும், செழுமையையும் பெறவும், விவசாயம் வளம் பெறவும், ஸ்ரீ லலிதா
பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக்கூடிய வராஹியின் அருள் பெறவும், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் பெறவும், தானியங்கள் செழித்து ஓங்கவும், வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகள் நீங்கவும், தொழில்களில் லாபம் பெருகவும், வீடு, நிலம் சம்பந்தமான செயல்களில் வெற்றி பெறவும், திருமணமாகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கவும் வராஹி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் பக்தர்கள்
கலந்துகொண்டு எதிரி துன்பம், தரித்திரம், கஷ்டம் ஏவல், பில்லி, சூனியம், கடன், ரோகம், மரணபயம், போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு
பெறலாம்.
மேற்கண்ட ஹோமங்களிலும் பூஜைகளிலும் கலந்துகொண்டு பிரசாதங்கள்
பெற்று ஆனந்தமான. வாழ வாருங்கள் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்திற்கு. அவன்
அருளால் அவன்தாள் வணங்குவோம்.
இந்த யாகத்திற்கு
புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற
பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513, வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் – 9443330203. Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
No comments:
Post a Comment