தன்வந்திரி பீடத்தில்
காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின்
125 ஆவது ஜெயந்தி விழாவும்
சிறப்பு
ஆராதனையும் நாளை நடைபெறுகிறது.
வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில்
அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ மகா பெரியவரின் 125 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு நாளை 29.05.2018 காலை
10.00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. “ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமை காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்.
கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில்
அழைத்து மகிழலாம்.. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி
பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும்
வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும். காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்தவரும்,
நூற்றாண்டு கண்ட அருளாளருமான ஸ்ரீ மஹாபெரியவா இந்து மதமும் அதன் உட்பிரிவுகளும் என்ற
தொடர் அரசியல் அமைப்பு சட்ட்த்தில் இடம்பெற காரணமானவர். அதனால்தான் இந்து மதத்திற்க்கு
இன்றளவுக்கு பாதுகாப்பு கிடைத்துக்கொண்டு இருக்கிறது. அறநெரியில் அனைவரும் வாழ வழிகாட்டிய
காஞ்சி பெரியவரின் திரு அவதார திருநாள் நாளை காலை வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் தன்வந்திரி
பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள மஹா பெரியவாளுக்கு 8.00 மணி முதல் 10.00
மணி வரை சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற உள்ளது. இவ்வைபத்தில் கலந்துகொண்டு மஹா
ஸ்வாமிகளின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment